மகளிர் உரிமைத் தொகை உங்க வங்கி கணக்குக்கு 1 ரூபாய் வந்துச்சா உடனே செக் பண்ணுங்க
தமிழகத்தில் கலைஞர் உரிமைத் தொகை திட்டத்திற்க்கான சோதனையாக ரூபாய் 1 பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1000 மாதம் தோறும் அளிக்கும் கலைஞர் உரிமை தொகை திட்டம் வரும் செப்டம்பர் 15ம் தேதி முதல்வர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட உள்ளது. மொத்தம் ஒரு கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பெண்கள் மகளிர் உரிமை திட்டத்தில் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு அதற்கான உரிய காரணம் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணில் எஸ்எம்எஸ் ஆக அனுப்பி வைக்கப்படும் என்று அரசு தெரிவித்து இருந்தது.
இதற்கான பணிகள் தொடங்கப்பட்டு எஸ்எம்எஸ் அனுப்பும் பணிகள் நடந்து வருவதாக தேர்வு செய்த பெண்களுக்கு கலைஞர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு சோதனை அடிப்படையில், குறுஞ்செய்தி அனுப்பும் பணி தொடங்கப்பட்டுள்ளது.
பயனாளிகள் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது என்ற தகவல் குறுஞ்செய்தி முலம் அனுப்படவுள்ளதாகவும், பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1 செலுத்தி நேரடியாக வரவு வைக்கப்படுகிறதா என்பது சோதிக்கப்படவுள்ளது.
ஒரு ரூபாய் அனுப்பியவுடன், விண்ணப்பதாரர்களின் கைப்பேசிக்கு குறுஞ்செய்தி வழியாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
தவறான வங்கிக் கணக்குகளுக்கு உரிமைத் தொகை சென்று விடக் கூடாது என்ற எண்ணத்தில் சோதனை அடிப்படையில் ஒரு ரூபாய் அனுப்பப்படுவதாக தமிழக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும் கைப்பேசி வழியாக விண்ணப்பதாரர்களைத் தொடர்பு கொண்டும் வங்கிக் கணக்கு விவரங்கள் உறுதி செய்யப்பட்டு வருகின்றன.
Tags: தமிழக செய்திகள்