Breaking News

100 ஏக்கரில் உலகதரத்தில் சென்னையில் தீம் பார்க் தமிழக அரசு அறிவிப்பு

அட்மின் மீடியா
0

தமிழ்நாடு சுற்றுலா கொள்கை 2023 வெளியீடு! சென்னையில் பிரமாண்ட தீம் பார்க்!

 


உலகின் மிகப்பெரிய பொழுது போக்கு பூங்காவான அமெரிக்காவில் உள்ள டிஸ்னி லேண்ட் போல சென்னை புறநகரில் 100 ஏக்கர் பரப்பளவில் தீம் பார்க் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

இது குறித்து தமிழ்நாடு சுற்றுலாத்துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீம் பார்க் தனியார் பங்களிப்புடன் 5 ஆண்டுகளில் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாடு சுற்றுலாத்துறை, சென்னை புறநகர் பகுதியில் 100 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட தீம் பார்க் அமைக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback