தமிழகம் முழுவதும் செப் 16 ம் தேதி மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறும் இடங்கள் முழு விவரம் job fair tamilnadu
தமிழகம் முழுவதும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு இணைந்து மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி வருகின்றார்கள் தமிழகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு உதவும் வகையில் மாவட்டம் தோறும் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் வாயிலாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
இம் முகாமில் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்கள் நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப இருக்கிறது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கல்வி முடித்தோர், டிப்ளமோ, ஐடிஐ, கல்வி முடித்தோர், பட்டதாரிகள் மற்றும் பொறியியல் பட்டதாரிகளும், தையற் பயிற்சி, நர்சிங் பயிற்சி உள்பட பல்வேறு பயிற்சி பெற்றவர்களும் கலந்து கொண்டு பணி வாய்ப்பினை பெறலாம்.
சென்னை மாவட்டம்:-
சென்னையில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 16-ந்தேதி நடக்கிறது
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால், சென்னையில் 2-வது மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 16-ந்தேதி (சனிக்கிழமை) மாதவரத்தில் உள்ள ஜெயகோவிந்த் ஹரிகோபால் அகர்வால்-அகர்சன் கல்லூரியில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற உள்ளது. 150- க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்துகொண்டு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்யவுள்ளனர்.
இந்த முகாமில் 8-ம் வகுப்பு தேர்ச்சி முதல் பட்டதாரிகள், ஐ.டி.ஐ., கணினி இயக்குபவர்கள், தையல் கற்றவர்கள் என அனைவரும் கலந்துகொள்ளலாம். முகாமில் கலந்துகொள்ள அனுமதி இலவசம். www.tmprivatejobs.tn.gov.in என்றஇணையத ளத்தில் பதிவு செய்து வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு, சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 044-24615160 என்ற தொலைபேசி வாயிலாகவோ, pjpsanthome@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாக தொடர் புகொள்ளலாம்.
மயிலாடுதுறை மாவட்டம்:-
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் – மகளிர் திட்டம் இணைந்து கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 16.09.2023 சனிக்கிழமையன்று காலை 8.30 மணி முதல் மதியம் 3.00 மணி வரை செம்பனார்கோவில் கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இம்முகாமில் 8வது, SSLC/HSC, ITI, டிப்ளமோ, பட்டதாரிகள் மற்றும் B.E உட்பட பல்வேறு கல்விதகுதிகளுக்கு தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான 18-35 வயதுக்குட்பட்ட பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர். எனவே தனியார் துறையில் வேலைதேடும் இளைஞர்கள் https://www.tnprivatejobs.tn.gov.in/candidate/Home/ca_signup என்ற இணையதளத்தில் பதிவு செய்துகொள்வதோடு, இவ்வேலைவாய்ப்பு முகாமில் நேரடியாக கலந்துகொண்டு பணிவாய்ப்பை பெற்றிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தங்கள் நிறுவனத்தில் காலிப்பணியிடம் உள்ள தனியார்துறை நிறுவனங்களும் இவ்வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு தகுதியுடைய வேலைநாடுநர்களை தேர்ந்தெடுத்து பயன்பெறுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வேலைவாய்ப்பு முகாமானது வேலைநாடுநர்களுக்கும், வேலையளிக்கும் நிறுவனங்களுக்கும் முற்றிலும் கட்டணமில்லா சேவையாகும். மேலும் தகவலுக்கு 04364299790 நடைபெறும் இடம்: கலைமகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, செம்பனார்கோவில், மயிலாடுதுறை - 609309 Landmark: https://goo.gl/maps/Fao91Pqc8oRwYdzY7
ராமநாதபுர மாவட்டம்:-
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்புற வாழ்வாதார இயக்கம் – மகளிர் திட்டம் இணைந்து கலைஞர் நூற்றாண்டு சிறப்பு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 16.09.2023 சனிக்கிழமையன்று காலை 9 மணி முதல் மதியம் 3.00 மணி வரை Infant Jesus Matriculation School-Ramanathapuram நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இம்முகாமில் 8வது, SSLC/HSC, ITI, டிப்ளமோ, பட்டதாரிகள் மற்றும் B.E உட்பட பல்வேறு கல்விதகுதிகளுக்கு தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான 18-35 வயதுக்குட்பட்ட பணியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர். எனவே தனியார் துறையில் வேலைதேடும் இளைஞர்கள் இவ்வேலைவாய்ப்பு முகாமில் நேரடியாக கலந்துகொண்டு பணிவாய்ப்பை பெற்றிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அரியலூர் மாவட்டம்:-
அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு தனியார் துறைகளில் பணியமர்த்தம் செய்யும் நோக்கோடு அரியலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம்;, அரியலூர் இணைந்துநடத்தும் மாபெரும் தனியார்;துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 16.09.2023 சனிக்கிழமை அன்று செந்துறை, அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் காலை 09.00 மணிமுதல் பிற்பகல் 3.00 மணிவரை நடைபெற உள்ளது. இம்முகாமில் அரியலூர் மாவட்டத்தில் உள்ள தனியார்துறை நிறுவனங்களும் அரியலூர், பெரம்பலூர், திருச்சி, சென்னை, கோவை, கரூர், திருப்பூர் மற்றும் ஈரோடு போன்ற மாவட்டங்களில் உள்ள தனியார்;துறை நிறுவனங்களும் பங்கேற்று தங்கள் நிறுவனத்திற்கு தேவையான தகுதியான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு:-
https://www.tnprivatejobs.tn.gov.in/Home/job_mela
சென்னை மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம் நாள்:- 16.09.2023
மயிலாடுதுறை மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம் நாள்:- 16.09.2023
அரியலூர் மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம் நாள்:- 16.09.2023
ராமநாதபுரம் மாவட்டம்:- வேலை வாய்ப்பு முகாம் நாள்:- 16.09.2023
Tags: தமிழக செய்திகள்