ரூ.2,000 நோட்டுக்களை வங்கியில் மாற்ற கால அவகாசம் நீட்டிப்பு ரிசர்வ் வங்கி அறிவிப்பு
ரூ.2,000 தாள்களை வங்கிகளில் மாற்றுவதற்கான கால அவகாசம் அக்.7ஆம் தேதி வரை நீட்டிப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு
2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி ரூ.1,000 மற்றும் ரூ.500 நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். அதன்பின்னர் புதிய 500 ரூபாய் நோட்டுகள் மற்றும் ரூ.2,000 நோட்டுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டது. கடந்த 7 ஆண்டுகளாக ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்த நிலையில், தற்போது திரும்பப் பெறப்படுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
நாட்டில் வரும் செப்டம்பர் 30 ஆம் தேதி வரை மட்டும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது
மேலும் செப்டம்பர் 30 தேதி வரை வங்கிகளில் ரூ.2000 நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் எனவும் ஒரு நாளைக்கு அதிகபட்சமாக ரூ. 20,000 வரை அதாவது 10 நோட்டுகள் வரை மாற்றி கொள்ளலாம் எனவும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்திருந்தார்
இந்நிலையில் அதற்க்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ளநிலையில் .ரூ.2,000 தாள்களை வங்கிகளில் மாற்றுவதற்கான கால அவகாசம் அக்.7ஆம் தேதி வரை நீட்டிப்பு: என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது
Tags: தமிழக செய்திகள்