நெசவு தொழில் செய்யவேண்டுமா - தினமும் ரூ 250 ஊக்கத்தொகை உடனே விண்ணப்பியுங்கள்
தமிழகத்தில் வேலைவாய்ப்பில்லாமல் இருக்கும் இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு கைத்தறி கற்று கொடுத்து அதன் மூலமாக தினமும் 250 ஊக்கத்தொகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, நெசவு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டத்தின் மூலமாக ரூ.1.17 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
2023–24-ல் முதற்கட்டமாக 300 இளைஞர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் பயிற்சி அளித்தல், கைத்தறி நெசவில் நெசவுத் தொழில்நுட்பங்களை பயிற்சியின் வாயிலாக கற்பித்தல்,
இப்பயிற்சியின் வாயிலாக கைத்தறி பொருட்களின் உற்பத்தியில் தரத்தையும் அளவையும் மேம்படுத்துதல் போன்றவை மேற்கொள்ளப்படவுள்ளன. பயிற்சியில் சேரும் விண்ணப்பதாரர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.250 வீதம் பயிற்சி காலம் முடிய ஊக்கத் தொகை வழங்கப்படும்.
கைத்தறி துறை இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டத்திற்கான விண்ணப்பப்படிவம்
APPLICATION FORM FOR ENROLMENT IN WEAVERS INDUCTION CUM ENTEREPRENEURSHIP PROGRAMME
கைத்தறி துறை இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டத்திற்கான அறிவுறுத்தல் கைத்தறி மற்றும் துணிநூல் துறையின் மான்யக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்டவாறு இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டம் (YOUNG WEAVERS INDUCTION AND ENTREPRENEURSHIP PROGRAMME FOR YOUNGSTERS) ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த அரசு 04.08.2023-ல் ஆணை வெளியிட்டுள்ளது.
இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள்:-
1.இளைஞர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் 45 நாட்கள் பயிற்சி அளித்து அவர்களை நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேர்த்து வேலைவாய்ப்பு வழங்குதல் (அல்லது) தொழில் முனைவோர்களாக உருவாக்குதல்.
2. பாரம்பரியமான கைத்தறி தொழிலை அதனுடைய பழமை மாறாமல் புத்துயிரூட்டுவது.
3. கிராமப்புறத்திலுள்ள இளைஞர்களும் கைத்தறி தொழிலை ஒரு தொழிலாக அவர்கள் பகுதியிலேயே ஆரம்பித்தல்.
4. வேலையில்லாத இளைஞர்களுக்கு நெசவுத் தொழில் தொடர்பாக குறுகியகால பயிற்சி அளித்தல்.
5. 2023-24-ல் முதற்கட்டமாக 300 இளைஞர்களை இத்திட்டத்தின் கீழ் பயிற்சி அளித்தல்.
6. கைத்தறி நெசவில் நெசவுத் தொழில் நுட்பங்களை பயிற்சியின் வாயிலாக கற்பித்தல்.
7. இப்பயிற்சியின் வாயிலாக கைத்தறி பொருட்களின் உற்பத்தியில் தரத்தையும் அளவையும் மேம்படுத்துதல்.
8. பயிற்சியில் சேரும் விண்ணப்பதாரர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.250/- வீதம் பயிற்சி காலம் முடிய ஊக்கத் தொகை வழங்கப்படுகிறது.
இப்பயிற்சிக்கு விண்ணப்பிப்பதற்கான தகுதிகள் :-
1. 18 முதல் 35 வயது வரை
2. கைத்தறிகளை இயக்குவதற்கு தகுதி உள்ளவர்களாக இருக்க வேண்டும்.
3. எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் பயிற்சியில் சேர விரும்பும் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் கீழ்க்காணும் இணைய தளத்தில் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்திட வேண்டும்.
விண்ணப்பிக்க:-
Tags: வேலைவாய்ப்பு