Breaking News

B.Ed படிக்க ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம் B.Ed apply online

அட்மின் மீடியா
0

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் மாணாக்கர் சேர்க்கை - 2023 - 2024 

 

இளநிலை கல்வியியல் பட்டப்படிப்பு - (Bachelor of Education - B.Ed.,) சேர்க்கை : 2023-2024

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள இளநிலை கல்வியியல் பட்டப்படிப்பு (B.Ed.,) முதலாமாண்டு மாணாக்கர் சேர்க்கைக்கான (2023-2024) விண்ணப்பங்களை www.tngasa.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்.

விண்ணப்பம் பதிவு செய்ய விண்ணப்பக் கட்டணமாக ரூ.500/- செலுத்தப்பட வேண்டும். 

SC/ST விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணம் ரூ.250/- மட்டும் செலுத்தினால் போதுமானது. 

மாணாக்கர்கள் விண்ணப்பிக்கும் போது தங்களது விருப்ப வரிசைப்படி கல்லூரிகளை தெரிவு செய்தல் வேண்டும். 

இது தொடர்பான கூடுதல் விவரங்கள் மற்றும் எந்தெந்த கல்லூரிகளில், என்னென்ன பாடப்பிரிவுகள், சேர்க்கை எண்ணிக்கை விவரங்கள் www.tngasa.in என்ற இணையதள முகவரியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம் : விண்ணப்பக் கட்டணத்தை விண்ணப்பதாரர்கள் Debit Card/Credit Card/Net Banking/UPI மூலம் இணையதள வாயிலாக செலுத்தலாம். இணையதள வாயிலாகக் கட்டணம் செலுத்த இயலாத மாணாக்கர்கள் கல்லூரி சேர்க்கை உதவி மையங்களில் The Director, Directorate of Collegiate Education, Chennai - 15" என்ற பெயரில் 01.09.2023 அன்று அல்லது அதற்குப் பின்னர் பெற்ற வங்கி வரைவோலை மூலமாகவும் அல்லது நேரடியாகவும் செலுத்தலாம்.

மாணாக்கர் சேர்க்கை வழிகாட்டி மற்றும் கால் அட்டவணையை மாணாக்கர்கள் மேற்குறித்த இணையதளம் வாயிலாக அறிந்துகொள்ளலாம்.

இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்யத் துவங்கிய நாள்:- 01.09.2023 

இணையதள வாயிலாக விண்ணப்பம் பதிவு செய்ய இறுதி நாள்:- 11.09.2023

Tamil Nadu Government and Government-Aided Colleges of Education Admissions 2023 for B.Ed. Courses (TNGASA-B.Ed. 2023) is an online process includes Registration, Choice Filling, Payment of Application Fee and Printing application. This is a unified portal that can be used to apply for one or more Colleges among Government and Government-Aided Colleges of Education offering B.Ed. courses in Tamil Nadu. Candidates are requested to read the instructions given here completely for the successful completion of their Registration and Admissions. The application fee is Rs.500/- for general category and Rs.250/- for SC/SCA/ST category.

(தமிழ்நாடு அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகள் 2023 பி.எட். படிப்புகள் (TNGASA-B.Ed. 2023) என்பது பதிவு, கல்லூரிகள் தேர்வு செய்தல், விண்ணப்பக் கட்டணம் செலுத்துதல் மற்றும் விண்ணப்பதினை அச்சிடுதல் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு நிகழ்நிலை செயல்முறையாகும். 

இது ஒரு ஒருங்கிணைந்த இணைய முகப்பு ஆகும், இது இளங்கலை கல்வியியல்(பி.எட்) வழங்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்க பயன்படுத்தப்படலாம். 

விண்ணப்பதாரர்கள் தங்கள் பதிவு மற்றும் சேர்க்கைகளை வெற்றிகரமாக முடிப்பதற்கு இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை முழுமையாக படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவினருக்கு ரூ.500/- மற்றும் SC/SCA/ST பிரிவினருக்கு ரூ.250/-) 

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகள் பட்டியல்:-

1 101 Institute of Advanced Study in Education, Saidapet, Chennai - 600015. 

2 102 Lady Willingdon Institute of Advanced Study in Education, Triplicane, Chennai - 600005. 

3 103 Government College of Education, Komarapalayam, Namakkal - 638183 

4 104 Government College of Education, Orathanadu, Thanjavur - 614625 

5 105 Government College of Education, Pudukottai - 622001 

6 106 Government College of Education for Women,Coimbatore - 641001 

7 107 Government College of Education, Vellore - 632006 

Government – Aided Colleges 

8 201 Annammal College of Education for Women, Thoothukudi - 628003

9 202 Lakshmi College of Education, Gandhigram, Dindigul - 624302 

10 203 N.K.T. National College of Education for Women, Triplicane, Chennai - 600005 

11 204 Sri.R.K.M.V College of Education, Coimbatore - 641020 

12 205 Sri Sarada College of Education(Autonomous), Salem - 636016 

13 206 Thiagarajar College Of Preceptors, Madurai - 625009 

14 207 V.O.C.College of Education, Thoothukudi - 628008 

15 208 Meston College of Education, Rayapettah, Chennai - 600014 

16 209 St.Xaviers College of Education, Palayamkottai - 627002 

17 210 Stella Matutina College of Education (Women), Chennai - 600083 

18 211 St. Christopher's College of Education, Vepery, Chennai - 600007 

19 212 St. Justin College of Education (Women), Madurai - 625009 

20 213 St. Ignatius College of Education, Palayamkottai, Tirunelveli - 627002 

21 214 N.V.K.S.D. College of Education, Attoor, Thiruvataru,Kanyakumari - 629177

Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback