அம்பேத்கர் பற்றி அவதூறு ஆர்.பி.வி.எஸ்.மணியன் அதிரடி கைது.!
அம்பேத்கர் பற்றி அவதூறு பேச்சு.! ஆன்மீக சொற்பாழிவாளர் அதிகாலையில் அதிரடி கைது.!ByManikandanSeptember 14, 2023 8:03 AMRBVS Manianஇந்துத்துவ அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத் (VHP) அமைப்பின் முன்னாள் தலைவராகவும், ஆன்மீக சொற்பொழிவாளராகவும் இருப்பவர் ஆர்.பி.வி.எஸ்.மணியன்
விசுவ ஹிந்து பரிஷத் மாநில தலைவரான ஆர்.பி.வி.எஸ். மணியன்,அண்மையில் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வெகு வைரலாக பரவியது சொற்பொழிவு கூட்டத்தில் பேசும் போது திருவள்ளுவர் அம்பேத்கர் மற்றும் பட்டியலில் மக்கள் குறித்து அவர் அவதூறாக பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது
அரசியல் சட்டத்தை உருவாக்கியது யார்னு சேர்மன் பேரை போட்டால் ராஜேந்திர பிரசாத் பெயரைத்தான் போடனும். அங்கு கிளார்க்காக வேலை பார்த்தவன், டைப் அடிச்சவன், டைப்புக்கு ப்ரூப் பார்த்தவன்.. அதான் அம்பேத்கர். அவர் தன்னுடைய மூளையில் இருந்து அரசியல் சாசனத்தை எழுதியதாக எங்கேயும் எழுதி வைக்கலை. என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது
இவரது பேச்சுக்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், இவர் மீது புகார் அளிக்கப்பட்டு இருந்தது. இதனை அடுத்து இன்று அதிகாலை 3 மணி அளவில், டி.நகரில் உள்ள ஆர்.பி.வி.எஸ்.மணியனின் வீட்டில் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். என தகவல்கள் வெளியாகி உள்ளது
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்