சூரியனை நோக்கி வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஆதித்யா விண்கலம்...! வீடியோ
சூரியனை நோக்கி வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி. சி-57 ராக்கெட்...!
- சந்திரனை அடுத்து சூரியனை ஆய்வு செய்ய செப் 2 ம் தேதி விண்கலம் ஏவும் இஸ்ரோ
சூரியன் தொடர்பான ஆராய்ச்சிக்காக ஆதித்யா எல் 1 விண்கலத்தை செப்டம்பர் 2ம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ
இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலத்தை கடந்த ஆகஸ்டு 14-ம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் செலுத்தியது.
இந்நிலையில் சூரியன் தொடர்பான ஆராய்ச்சிக்காக ஆதித்யா எல் 1 விண்கலத்தை செப்டம்பர் 2ம் தேதி விண்ணில் செலுத்தவுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றதை அடுத்து ஆதித்யா எல் 1 திட்டம் செயல்படுத்தபடவுள்ளது. ஆதித்யா எல் 1 விண்கலத்தை செப்டம்பர் முதல் வாரத்தில் விண்ணில் செலுத்த இருப்பதாக இஸ்ரோ ஏற்கனவே அறிவித்து இருந்தது. இந்த நிலையில், பி.எஸ்.எல்.வி – C57 ராக்கெட் மூலம் ஆதித்யா விண்கலத்தை, செப்டம்பர் 2-ல் இஸ்ரோ விண்ணில் செலுத்த உள்ளது
இந்த விண்கலத்தை ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி தளத்திலிருந்து செப்.02ம் தேதி காலை 11:30 க்கு விண்ணில் செலுத்த உள்ளது. இந்த நிகழ்வை பொது மக்களும் காணலாம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
வீடியோ
Tags: இந்திய செய்திகள்