Breaking News

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் புதிதாக விண்ணப்பிக்கலாம் அமைச்சர் அறிவிப்பு!

அட்மின் மீடியா
0

கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு புதிதாக விண்ணப்பிக்கலாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் கடந்த செப்.15 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 1.06 கோடி குடும்ப தலைவிகளின் வங்கி கணக்கிற்கு ரூ.1000 வரவு வைக்கப்பட்டுள்ளது. 

இதனிடையே, ரூ.1000உரிமைத்தொகை விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ள குடும்ப தலைவிகளுக்கு மறுவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது

விண்ணப்பம் நிராகரிப்பு செய்யப்பட்ட குடும்ப தலைவிகள் அடுத்த 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், ரூ.1000 உரிமைத்தொகைக்கு விண்ணப்பிக்க தவறியவர்களும் விண்ணப்பிக்கலாம் எனவும், அடுத்த 30 நாட்களுக்குள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து ஒப்படைக்கும்படி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 

அதாவது மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் இதுவரை விண்ணப்பிக்காதோர் மேல் முறையீடு செய்ய வழங்கப்பட்டிருக்க கூடிய அதே கால அவகாசத்தில் புதிதாக இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தகவல் தெரிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback