கூகுள் மேப்பை பார்த்து காரை ஓட்டிய நபர் பறிபோன உயிர்! நடந்தது என்ன முழு விவரம்
அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தை சேர்ந்த பிலில் பேக்சோன், இவர் மருத்துவ சாதனங்களை விற்பனை செய்பவராக பணியாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர்
கடந்த செப்டம்பர் மாதம் நண்பனின் மகளுக்கும், இவரின் மகளுக்கும் ஒரே நாளில் பிறந்தநாள் என்பதால், இருவரின் பிறந்தநாளையும் ஒன்றாக கொண்டாட நண்பனின் வீட்டிற்குச் சென்றிருக்கிறார்.பிறந்தநாள் கொண்டாட்டம் முடித்து தன் வீட்டிற்க்கு செல்ல காரில் கிளம்பியுள்ளார்
கூகுள்மேப் சொல்லும் தகவலை வைத்து தனது காரை இயக்கி வந்த அவர் வழியில் கூகுள் மேப் பாலத்தின் மீது செல்லும்படி வழியைக் காட்டவே, அப்படியே சென்றுள்ளார்
அந்த பாலம் ஏற்கனவே பழுதாகி பாதியில் உடைந்து இருந்த பாலம் ஆகும், மேலும் அங்கு தடுப்பு ஏதும் இல்லாததால் அவர் அந்தப் பாலத்தில் இருந்து 20 அடிக்குக் கீழே விழுந்து நீரில் மூழ்கி இறந்துள்ளார்.
சம்பந்தப்பட்ட பாலம் சேதமடைந்து ஓராண்டு மேலாவதாகவும், பலமுறை புகார் அளித்தும் கூகுள் தனது மேப் வசதியில் அந்த பாதையை காட்டுவதால் பலரும் விபத்தில் சிக்குவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் பாலத்திலிருந்து காருடன் கீழே விழுந்து பேக்சோனின் மனைவி அலிகா, கூகுள் நிறுவனம் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், கூகுள் மேப் சேவை அப்டேட் செய்யப்படாமல் அலட்சியமாக இருந்ததே தனது கணவனின் மரணத்துக்கு காரணம் எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் என் கணவர் இறந்த ஆறு மாதங்களுக்குப் பின்னரும் தற்போதும் அந்தப் பாலம் செல்லக்கூடிய பாதையாகவே காட்டப்படுகின்றது, மேற்கொண்டு யாருக்கும் எந்த வித அசாம்பாவிதமும் நடக்ககூடாது என்பதற்காக வழக்கு தொடர்துள்ளேன் என கூறியுள்ளார்
Tags: வெளிநாட்டு செய்திகள்