Breaking News

ஆபாச படங்கள் பார்ப்பது குற்றம் அல்ல கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு

அட்மின் மீடியா
0

  • தனிமையில் யாருக்கும் தொந்தரவு செய்யாமல் ஆபாச படம் பார்ப்பது குற்றம் அல்ல 
  • ஆபாச படங்கள், வீடியோக்களை மற்றவர்களுக்கு காட்டாமல் தனிப்பட்ட நேரத்தில் பார்ப்பது சட்டப்படி குற்றமாகாது 
  • அது ஒரு நபரின் தனிப்பட்ட விருப்பம் என்றும் கேரள உயர்நீதிமன்றம் 



ஆபாச படங்கள் பார்ப்பது குற்றம் அல்ல கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பு 

கேரள மாநிலம் கொச்சினில் ஆலுவா அரண்மனை பகுதியில் கடந்த 2016ஆம் ஆண்டு 33 வயதான இளைஞர் ஒருவர் தனது செல்போனில் சாலையோரம் ஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக ரோந்து சென்ற போலீசார், அவர் ஆபாச படம் பார்த்ததை கையும் களவுமாக பிடித்தனர். அவரை கைது செய்த போலீசார் ஆபாசமாக நடந்துகொண்டதாக பிரிவு 292-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்தனர்.

தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கையும், தன் மீதான நீதிமன்ற நடவடிக்கைகளையும் ரத்து செய்யக் கோரி அந்த இளைஞர் கேரள உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். 

இந்த வழக்கில் நீதிபதி குன்னி கிருஷ்ணன் அளித்த தீர்ப்பில்

ஒருவர் தனிமையில் பார்ப்பது சட்டப்படி குற்றமாகாது என்றும் அது அவருடைய தனிப்பட்ட விருப்பம் என்றும் இத்தகைய செயலை குற்றமாக அறிவிப்பது தனிமனித உரிமை மீறும் செயல் என்றும் நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

இந்திய தண்டனை சட்டம் 292ன் கீழ் வழக்கு பதிவு செய்ய எந்த முகாந்திரமும் இல்லை என்றும் இதனால் அவர் மீதான சட்ட நடவடிக்கை அனைத்தையும் ரத்து செய்வதாகவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

குற்றம் சாட்டப்பட்ட நபர் ஏதேனும் ஆபாச வீடியோ அல்லது புகைப்படத்தை பரப்பவோ அல்லது விநியோகம் செய்திருந்தால் தான் குற்றம் என்றும் தனிமையில் அவர் ஆபாச படம் பார்ப்பதை குற்றமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றும் அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback