Breaking News

பிரபல இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் மரணம்!

அட்மின் மீடியா
0

 பிரபல இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து மாரடைப்பால் மரணம்!


ஜி. மாரிமுத்து இவர் திரைப்பட இயக்குனரும் நடிகருமாவார். இவர் ககண்ணும் கண்ணும் (2008) படத்தில் இயக்குநராக அறிமுகமான பிறகு , புலிவால் (2014) படத்தை இயக்கினார் மேலும் தமிழ் சினிமாவில் நடிகராக துணை வேடங்களில் நடித்துவருகிறார்.

மேலும் சின்னதிரையில் சீரியலில் சண்டீவியில் எதிர் நீச்சல் தொடரில் நடித்து பிரபலமாகினார் பெண்களுக்கு எதிரான அடக்குமுறையையும், அதை அவர்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதையும் காண்பிப்பது போல இந்த எதிர்நீச்சல் தொடர் அமைந்துள்ளது. இந்த மெகா தொடரில் ஆதி குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் நடிகரும், இயக்குனருமான மாரிமுத்து நடித்து வருகிறார்

இந்நிலையில் இன்று காலை டப்பிங் பேசிக் கொண்டிருந்த நடிகர் மற்றும் இயக்குனர் மாரிமுத்து (56), திடீரென்று மயக்கம் அடைந்து கீழே விழுந்தார். அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது , அவர் இறந்து விட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜெயிலர், பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்து பிரபலமானவர், மாரிமுத்துசென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் மாரிமுத்துவின் உடல் வைக்கப்பட்டுள்ளது

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback