மூத்த குடிமக்களின் வாழ்க்கை மற்றும் சொத்துகளை பாதுகாப்பது மாவட்ட ஆட்சியரின் கடமை -சென்னை உயர் நீதிமன்றம்
மூத்த குடிமக்களின் வாழ்க்கை மற்றும் சொத்துகளை பாதுகாப்பது மாவட்ட ஆட்சியரின் கடமை -சென்னை உயர் நீதிமன்றம்
திருப்பூரைச் சேர்ந்த பாட்ஷா - ஷகிரா பேகம் தம்பதிக்கு இரண்டு ஆண், இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்.
மூத்த மகன் முகமது தயான் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில், ஷகிரா பேகம் தனது சொத்தை, தயான் பெயரில் எழுதி வைத்தார்.சொத்து வந்த பிறகு தன்னையும் தன் கணவரையும் முறையாக கவனிக்கவில்லை என்றும், தங்களுக்கான மருத்துவ செலவை மகள் வழங்கியதால், தயான் பெயரில் எழுதி வைத்த சொத்து பத்திரத்தை ரத்து செய்யக்கோரி திருப்பூர் ஆர்.டி.ஓக்கு ஷகிரா பேகம் விண்ணப்பித்தார்.இந்த விண்ணப்பம் மீது விசாரணை நடத்திய ஆர்.டி.ஓ. பத்திர பதிவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
ஆர்.டி.ஓ. உத்தரவை எதிர்த்து முகமது தயான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், தன்னுடைய தாய் மற்றும் தந்தையை முறையாக கவனித்ததாகவும் ஆர்.டி.ஓ. உத்தரவை ரத்து செய்யவும் கோரி இருந்தார்
இந்த மனுவை விசாரித்த மாண்புமிகு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் அவர்கள்
பிள்ளைகள் முறையாக கவனிக்கவில்லை என மூத்த குடிமக்கள் அளிக்கும் புகாரை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது. உடனடியாக அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், போலீஸார் அந்த வழக்கை எப்படி விசாரிக்கிறார்கள் என்பதையும் கண்காணிக்க வேண்டும். முதியவர்களின் வாழ்க்கை மற்றும் சொத்துகளை பாதுகாப்பது மாவட்ட ஆட்சியர்களின் கடமை.உணவு, உறைவிடம் மட்டுமே இயல்பான வாழ்க்கைக்கு போதுமானது கிடையாது.
அன்புடனும், அக்கறையுடனும் முதியவர்களை கண்ணியமாக நடத்த வேண்டும். இதனை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்" என நீதிபதி உத்தரவிட்டார்.
Tags: தமிழக செய்திகள்