நாடாளுமன்ற தேர்தல் | இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியோடு தொகுதி பங்கீடு தி.மு.க பேச்சுவார்த்தை Indian Union Muslim League

அட்மின் மீடியா
0

நாடாளுமன்ற தேர்தல் | இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியோடு தொகுதி பங்கீடு தி.மு.க பேச்சுவார்த்தை Indian Union Muslim League

நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கியது தி.மு.க. அண்ணா அறிவாலயத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியோடு தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் பேச்சுவார்த்தை.

2024 ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள திமுக கட்சி பேச்சு வார்த்தையை தொடங்கியுள்ளது

ஆளும் திமுக கூட்டணியில் காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, மதிமுக, முஸ்லீம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடப்பெற்றுள்ளன. இந்த கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தையை திமுக தலைவர்கள் தற்போது தொடங்கி உள்ளனர்.

இன்று திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் இந்திய முஸ்லீம் லீக் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் , திமுக மூத்த நிர்வாகிகளை சந்தித்து பேசியுள்ளனர். 

அப்போது கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது திமுக கூட்டணி கட்சி சார்பாக ராமநாதபுரம் தொகுதியில்  முஸ்லீம் லீக் கட்சியில் இருந்து நவாஸ் கனி போட்டியிட்டு வெற்றி பெற்றார் .

இராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படும் நிலையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி உடனான பேச்சுவார்த்தை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் கூட்டணி பேச்சுவார்த்தையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவர் காதர் மொய்தீன், நவாஸ்கனி எம்.பி ஆகியோருடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளது

மேலும் அடுத்து கூடிய விரைவில் மதிமுக, இடதுசாரிகள், விசிக, கொங்கு மக்கள் கட்சி உள்ளிட்ட கட்சிகள் உடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback