சுங்கதுறை தேர்வில் ப்ளுடூத் உதவியுடன் பிட் வடமாநில இளைஞர்கள் 30 பேர் கைது முழு விவரம்
சென்னையில் நடைபெற்ற சுங்கத்துறை தேர்வில் வட மாநில இளைஞர்கள் 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுங்கத்துறையில் 7 ஓட்டுநர், 8 கேண்டீன் உதவியாளர், ஒரு சமையலர், ஒரு எழுத்தர் என 17 பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு, சென்னை பாரிமுனை ராஜாஜி சாலையில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது. நாடு முழுவதும் இருந்து சுமார் 1600 பேர் இந்த தேர்வில் கலந்து கொண்டனர்.
அப்போது தேர்வு எழுதிக்கொண்டிருந்த வடமாநில இளைஞர்கள் சிலரின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்திய நிலையில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவர்கள் தங்களது காதில் சிறிய அளவிலான ப்ளூடூத் கருவி பொருத்தி இருந்தது தெரியவந்தது.அப்பொழுது 30 பேர் ப்ளூடூத் உதவியுடன் தேர்வில் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில் போலீசார் அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 30 வடமாநில இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ள 30 பேரில் 26 பேர் ஹரியானாவையும், தலா இருவர் பிகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தையும் சேர்ந்தவர்கள். தமிழ்நாட்டில் நடைபெற்ற போட்டித் தேர்வில் வட இந்தியர்கள் மோசடியில் ஈடுபட்டிருப்பது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது.மேலும், ‘ப்ளூடூத்’ கருவி பொருத்தி முறைகேட்டில் ஈடுபட்ட 30 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
இவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் இனி அரசு போட்டி தேர்வுகளில் பங்கேற்க முடியாத முறையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது, மேலும் வெளியில் இருந்து அவர்களுக்கு உதவிய நபரை போலிசார் தேடி வருகின்றார்கள்.
Tags: தமிழக செய்திகள்