டிகிரி படித்த பெண்களுக்கான வேலை வாய்ப்பு விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம்
டிகிரி படித்த பெண்களுக்கான வேலை வாய்ப்பு விண்ணப்பிப்பது எப்படி முழு விவரம்
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர் பணிக்காக காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது

தூத்துக்குடி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகு வட்டார ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான அறிவிப்பு
தூத்துக்குடி மாவட்டம் மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்குட்பட்ட வட்டார இயக்க மேலாண்மை அலகுகளில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை ஒப்பந்த முறையில் பூர்த்தி செய்யும்/நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 2510.2023 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்
1. விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, சாதிச்சான்று, கணினி பயிற்சி பெற்றத்தற்கான சான்று மற்றும் முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு நகல் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.
2. விண்ணப்ப படிவத்தில் உள்ள விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
3. தகுதியில்லாத மற்றும் காலங்கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
பதவியின் பெயர் :-
வட்டார ஒருங்கிணைப்பாளர்
கல்விதகுதி:-
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஓர் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
மேலும் கூடுதலாக கணினி அறிவு மற்றும் MS OFFICE தெரிந்திருக்கவேண்டும்.
முன்அனுபவம் மக்கள் அமைப்பு சார்ந்த திட்டங்களில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டு பெற்று இருக்க வேண்டும்
வயது வரம்பு:-
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 18 வயதாக இருக்கவேண்டும்
அதேபோல் அதிகபட்ச வயதாக 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க:-
இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழ் உள்ள மேலும் விவரங்களுக்கு என்பதை கிளிக் செய்து டவுன்லோடு செய்து பிரிண்ட் எடுத்து சரியாக பூர்த்தி செய்து உரிய சான்றுகளின் நகல்களுடன் இணை / திட்டஇயக்குநர், மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் வேலை நாட்களில் காலை 10.00 மணி முதல் 5.45 வரை நேரிலோ அல்லது இணை இயக்குநர் / திட்ட இயக்குநர், தமிழ்நாடு ஊரக வாழ்வாதர இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், இரண்டாவது தளம், கோரம்பள்ளம் - 628101, தூத்துக்குடி மாவட்டம் என்ற முகவரிக்கு பதிவஞ்சல் மூலமாகவோ 25.10.2023 மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும்.
தபால் முகவரி:-
தமிழ்நாடு ஊரக வாழ்வாதர இயக்கம்,
மாவட்ட இயக்க மேலாண்மை அலகு,
மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்,
இரண்டாவது தளம்,
கோரம்பள்ளம் - 628101,
தூத்துக்குடி மாவட்டம்
வட்டார ஒருங்கிணைப்பாளர் காலிப்பணியிடத்திற்கான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் இணை இயக்குநர் / திட்ட இயக்குநர், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட அலகு, மற்றும் தூத்துக்குடி மாவட்டத்திற்கான www.thoothukudi.nic.in என்ற இணையதளத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்க கடைசி நாள்:-
25.10.2023 இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
மேலும் விவரங்களுக்கு:-
https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2023/10/2023101275.pdf
Tags: வேலைவாய்ப்பு