Breaking News

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் மறுப்பு - சென்னை உயர்நீதிமன்றம்

அட்மின் மீடியா
0

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் மறுப்பு - சென்னை உயர்நீதிமன்றம்

சட்டவிரோத பண பரிவர்த்தையில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறை கடந்த 14-ம் தேதி அதிகாலை கைது செய்தது. அவரை கைது செய்தபோது அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அதன்பின்பு அவருக்கு அங்கு நடந்த பரிசோதனையில் இருதயத்தில் இரத்த அடைப்பு உள்ளது பைபாஸ் அறுவை சிகிச்சை செய்ய பரிந்துரைக்கப்பட்டதுஅதன்பின்பு நீதிமன்ற அனுமதியுடன் காவேரி மருத்துவமனையில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தற்போது நீதிமன்ற காவலில் புழல் சிறையில் உள்ளார்.

செந்தில் பாலாஜி கைதை தொடர்ந்து அவரிடம் இருந்த இரு துறைகள் வெவ்வேறு அமைச்சர்களுக்கு மாற்றி கொடுக்கப்பட்டன. 

அதன்படி அமைச்சர் தங்கம் தென்னரசுக்கு மின் துறையும், அமைச்சர் முத்துசாமிக்கு மதுவிலக்கு ஆய தீர்வை துறையும் கூடுதலாக ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்யப்பட்டது 

மேலும் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என தமிழக அரசு அறிவித்து இருந்தது.

சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில், ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

தனக்கு ஜாமீன் வழங்க வேண்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட்து

இந்த மனுவை நீதிபதி ஜெயச்சந்திரன் விசாரித்தார் இரு தரப்பு வாதம் முடிவடைந்த நிலையில் இன்று அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க முடியாது என மறுப்பு  தெரிவித்து  செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து  சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback