நாவலூர் சுங்கச்சாவடியில் நாளை முதல் கட்டணம் ரத்து! தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அட்மின் மீடியா
0
நாவலூர் சுங்கச்சாவடியில் நாளை (அக்.19) முதல் கட்டணம் ரத்து!
சென்னையில் 2-ம் கட்ட மெட்ரோ ரெயில்கள் பணி நடந்து வருகிறது. நாவலூர் சுங்கச்சாவடி பகுதியில் மெட்ரோ ரயில் பணிகள் தொடங்கப்பட உள்ளது.இதனால் நாவலூர் சுங்கச்சாவடியில் நாளை முதல் சுங்கச்சாவடி கட்டணம் வசூலிக்கப்படுவது நிறுத்தி வைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிவித்துள்ளார்.
சென்னை பழைய மகாபலிபுரம் ராஜீவ் காந்தி சாலையில் அமைந்திருக்கும் நாவலூர் சுங்கச்சாவடி, மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருவதால் மூடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மெட்ரோ பணிகள் முடிக்கப்படும் போது மீண்டும் இந்த டோல் பிளாசா திறக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.
Tags: தமிழக செய்திகள்