Breaking News

ஊர்க்காவல் படையில் துணை வட்டார தளபதி பதவிக்கு விண்ணப்பிக்கலாம் முழு விவரம் இதோ..

அட்மின் மீடியா
0

ஊர்க்காவல் படையில் துணை வட்டார தளபதி பதவிக்கு விண்ணப்பிக்கலாம் முழு விவரம் இதோ..



திருநெல்வேலி மாநகர ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள துணை வட்டார தளபதி பதவிக்கு ஆள் தேர்வு செய்யப்படவுள்ளது அதற்கு பொதுநல சேவையும் தன்னார்வ தொண்டும் செய்ய விருப்பம் உள்ள, சமூகத்தில் நல்ல அந்தஸ்தில் உள்ள நபர்கள், தனியார் நிறுவன தொழிலதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆண்/பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். கீழ்கண்ட ஆவணங்களுடன் பாளையங்கோட்டை மாநகர ஊர்க்காவல் படை அலுவலகத்தில் 25-10-2023 ம் காலை 10 மணி முதல் 31-10-2023 மாலை 06 மணிக்குள் நேரில் வந்து சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்:-

திருநெல்வேலி மாநகர ஊர்க்காவல்படையில் துணை வட்டார தளபதி பதவிக்கு ஆள்தேர்வு

திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவுப்படி, திருநெல்வேலி மாநகர ஊர்க்காவல்படையில், காலியாக உள்ள துணை வட்டார தளபதி பதவிக்கு ஆள் தேர்வு செய்யப்பட உள்ளது. அதற்கு நல்ல சமூக அந்தஸ்தில் உள்ள நபர்கள், தனியார் நிறுவன தொழில் அதிபர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் ஆண் / பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம். 

மேலும் பொதுநல சேவையும், தன்னார்வ தொண்டும் செய்ய விருப்பம் உள்ளவர்களாகவும் இருக்க வேண்டும். மேலும் கீழ்கண்ட சான்றிதழ்களை தயார் செய்து, பாளையங்கோட்டை மாநகர ஊர்க்காவல்படை அலுவலகத்தில் 25.10.2023 காலை 10 மணி முதல் 31.10.2023 மாலை 6 மணிக்குள் நேரில் வந்து சமர்பிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. தகுதிகள்:

1) பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

2) 21 வயதுக்கு குறையாமலும் 50 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

3) திருநெல்வேலி மாநகர எல்லைக்குள் குடியிருக்க வேண்டும்.

கொண்டுவர வேண்டிய ஆவணங்கள்.

1) பாஸ்போர்ட் சைஸ் போட்டோ -2.(கலர்)

2) கல்வி தகுதிச் சான்று. (அசல் மற்றும் ஒரு சான்றொப்பமிட்ட நகல்)

3) ஆதார் அட்டை. (அசல் மற்றும் ஒரு சான்றொப்பமிட்ட நகல்)

4) இருப்பிட சான்று (அசல் மற்றும் ஒரு சான்றொப்பமிட்ட நகல்)

5) மருத்துவ தகுதிச்சான்று (அரசு மருத்துவரிடம் பெற்றிருக்க வேண்டும்)

6) சுயவிபர படிவம்.

Tags: தமிழக செய்திகள் வேலைவாய்ப்பு

Give Us Your Feedback