Breaking News

பிரதமர் நரேந்திர மோடி இலவச ரீசார்ஜ் என பரவும் வதந்தி யாரும் நம்பவேண்டாம்

அட்மின் மீடியா
0

கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பலரும்  PM Narendra Modi is giving 3 Months Free recharge to all Indian users so that more and more people can vote for BJP in the 2024 elections and BJP government can be formed again. Click on the link given below to get 3 Months Free Recharge. (Last Date 16 NOVEMBER 2023) என்று  ஒரு செய்தியினை பலரும் ஷேர் செய்து  வருகின்றார்கள். 

தமிழில்:-

பிரதமர் நரேந்திர மோடி அனைத்து இந்திய பயனர்களுக்கும் 3 மாதங்கள் இலவச ரீசார்ஜ் வழங்குகிறார், இதன் மூலம் 2024 தேர்தலில் அதிக மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்கவும், மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கவும் முடியும். 3 மாதங்களுக்கு இலவச ரீசார்ஜ் பெற கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்யவும். (கடைசி தேதி - 16 நவம்பர் 2023)



அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது



அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


முழு விவரம்:-

இதுபோல் பாஜக எந்த வித ரீச்சாஜ் திட்டத்தையும் அறிவிக்கவில்லை

பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தியில் உள்ளது பாஜகவின் அசல் இணையதளம் கிடையாது

அது போலியான பிஷ்ஷிங் இணையதளம் ஆகும்

இருப்பினும், நீங்கள் இணைப்பைக் கிளிக் செய்தால், உங்கள் பெயர், மொபைல் எண் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் போன்ற உங்கள் தனிப்பட்ட தகவல்களை வழங்குமாறு கேட்கும் ஒரு போலி வலைத்தளத்திற்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள். 

இந்தத் தகவலை ஸ்கேமர்கள் அடையாளத் திருட்டு அல்லது நிதி மோசடி செய்யப் பயன்படுத்தலாம்.அரசாங்கம் இலவச மொபைல் ரீசார்ஜ் செய்வதாகக் கூறப்படும் செய்தியை நீங்கள் பெற்றால், செய்தியில் உள்ள எந்த இணைப்பையும் கிளிக் செய்ய வேண்டாம். 

தெரியாத அனுப்புநர்களிடமிருந்து வரும் செய்திகளில் உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம்.

மோசடி குறித்து காவல்துறை மற்றும் சைபர் கிரைம் அதிகாரிகளிடம் புகார் செய்யுங்கள்.


முடிவு:-


எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback