வீட்டு கடன் கட்டவில்லை என வீட்டின் சுவரில் எழுதிய வங்கி ஊழியர்கள் - புகார் அளித்த உரிமையாளர் முழு விவரம்
கடன் தவணையை செலுத்திய பிறகும் கட்டவில்லை என வீட்டின் சுவரில் எழுதிய வங்கிட்
ஆண்டிபட்டி அருகே வாங்கிய கடனுக்கு தவணை செலுத்திய பிறகும் பாக்கி இருப்பதாக கூறி வீட்டு சுவரில் வீட்டுக்கடன் செலுத்தவில்லை என்று பெரிய எழுத்துக்களில் பெயிண்டால் எழுதி வைத்து விட்டு சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள அன்னை இந்திரா நகர் காலனியில் வசித்து வருபவர் பிரபு. இவர் தனியார் நிறுவனத்தில் சமையல்காரராக பணிபுரிகின்றார்
இவர் வசிக்கும் வீட்டின் மீது தேனியில் உள்ள ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 3 லட்சம் அடமானக் கடன் பெற்றுள்ளார். வாங்கிய கடனுக்கு முறையாக தவணை செலுத்தி முடித்து விட்டு ஆவணங்களை தரும்படி தனியார் நிறுவன அதிகாரிகளிடம் கேட்ட போது,
நீங்கள் இன்னும் ரூ1.5 லட்சம் வரை கடன் தொகை பாக்கி செலுத்த வேண்டி உள்ளதாகவும் அவற்றை செலுத்தி விட்டு ஆவணங்களை வாங்கி செல்லும் படியும் கூறியுள்ளார்கள்
மேலும் பிரபு வேலைக்கு சென்றிருந்த நேரத்தில் அவரது வீட்டுக்கு வந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் வீட்டின் சுவர்களில் வீட்டுக்கடன் செலுத்தவில்லை என்று பெரிய எழுத்துக்களில் பெயிண்டால் எழுதி வைத்து விட்டு வீட்டிலிருந்த பிரபுவின் குடும்பத்தினரையும் மிரட்டி விட்டு சென்றுள்ளார்கள்
வாங்கிய கடனுக்கு பணம் செலுத்திய பின்பும் தன்னையும், தனது குடும்பத்தினரையும் மிரட்டிய தனியார் நிதி நிறுவனம் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி கானாவிலக்கு காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Tags: தமிழக செய்திகள்