Breaking News

தீபாவளி ஆம்னி பேருந்துகளில் கட்டணம் எவ்வளவு? - முழு விவரம்

அட்மின் மீடியா
0

தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்த தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்கு செல்லும் ஆம்னி பஸ்களுக்கான டிக்கெட் கட்டண தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து துறையின் கோரிக்கையை ஏற்று இந்தாண்டு 5% ஆம்னி பேருந்து குறைக்கப்பட்டதாகவும், கடந்த ஆண்டு 25% குறைக்கப்பட்டு ஆக மொத்தம் 2 ஆண்டுகளில் 30% ஆம்னி பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்



சென்னையில் இருந்து நாகர்கோவில் இடையே குறைந்தபட்ச கட்டணம் ரூ.2,211 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.3,765 டிக்கெட் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து நெல்லை இடையே குறைந்தபட்ச கட்டணம் ரூ.1960 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.3,268 டிக்கெட் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து மதுரை இடையே குறைந்தபட்ச கட்டணம் ரூ.1688 அதிகபட்ச கட்டணம் ரூ.2554 டிக்கெட் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து தென்காசிக்கு குறைந்தபட்சமாக ரூ.1975, அதிகபட்சமாக ரூ.3,292 டிக்கெட் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து ராஜபாளையத்துக்கு குறைந்தபட்சமாக ரூ.1,756, அதிகபட்சமாக ரூ.2,926, டிக்கெட் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து தேனிக்கு குறைந்தபட்சமாக ரூ.1,630, அதிகபட்சமாக ரூ.2,717 டிக்கெட் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து திருச்சிக்கு  குறைந்தபட்ச கட்டணம் ரூ.1,325 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.1,841 டிக்கெட் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து சேலத்திற்க்கு  குறைந்தபட்ச கட்டணம் ரூ.1,363 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.1,895 டிக்கெட் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து கோவை குறைந்தபட்ச கட்டணம் ரூ.1,725 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ.2,875 டிக்கெட் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து ஈரோடுக்கு குறைந்தபட்சமாக ரூ.1,276, அதிகபட்சமாக ரூ.2,127 டிக்கெட் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு குறைந்தபட்ச கட்டணமாக ரூ.1,097, அதிகபட்சமாக ரூ.2,665, டிக்கெட் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து நாகப்பட்டினத்துக்கு குறைந்தபட்சமாக ரூ.972, அதிகபட்சமாக ரூ.1,620, டிக்கெட் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து சிதம்பரத்துக்கு குறைந்தபட்சமாக ரூ.690, அதிகபட்சமாக ரூ.1,150 , டிக்கெட் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் இருந்து பாண்டிச்சேரிக்கு குறைந்தபட்சமாக ரூ.502, அதிகபட்சமாக ரூ.836 டிக்கெட் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பயணிகளுக்கு  தீபாவளி சிறப்புப் பேருந்துகள் குறித்து புகார் இருப்பின் பொதுமக்கள் தெரிவிக்க 24 மணி நேரமும்செயல்படக் கூடிய இலவச தொடர்பு எண்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

 9445014450 மற்றும் 9445014436 ஆகிய 2 எண்களிலும் புகார் அளிக்கலாம். 

பண்டிகை நாட்களை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகள் அதிக கட்டணம் வசூலித்தால் அது குறித்த புகார் கொடுக்க 1800 425 6151 ஆகிய எண்ணும், மேலும் 044 - 2474902, 26280445. 26281611 ஆகிய எண்களின் தொடர்பு கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இது மட்டுமில்லாமல் 24 மணி நேரமும் புகார்களை கண்காணிக்கச் சிறப்புப் புகார் அறை ஒன்று கோயம்பேடு பேருந்து நிலையத்தில் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback