Breaking News

உங்கள் பெயரில் எத்தனை சிம்கார்டு உள்ளது என ஆன்லைனில் கண்டுபிடிப்பது எப்படி check how many sim card on my name

அட்மின் மீடியா
0

உங்கள் பெயரில் எத்தனை மொபைல் நம்பர் உள்ளது என்று கண்டுபிடிக்கலாம்



நம்மில் பொதுவாக அனைவரும் இரண்டிற்கும் மேற்பட்ட மொபைல் எண்களை வைத்துள்ளோம். சில நேரம் வேறு யாராவது நம் பெயரில் மொபைல் எண் வைத்துள்ளார்களா என சந்தேகம் எழும்.

உங்கள் ஐடியில் தெரியாத எண் இயங்கினால், எப்படி புகார் செய்து அதை நிறுத்துவது. உண்மையில் உங்கள் ஐடியில் எத்தனை சிம்கள் செயலில் உள்ளன. இதைக் கண்டறிய, நமது இந்திய அரசாங்கம் ஒரு போர்ட்டலைத் தயாரித்துள்ளது, இதன் மூலம் நீங்கள் அனைத்து தகவல்களையும் எளிதாகப் பெற முடியும்

மேலும் இந்த இணையதளத்தின் மூலம், மொபைல் இணைப்புகளை கண்டறிவதோடு, திருடப்பட்ட/இழந்த மொபைல்களைக் மீட்டெடுக்கவும் முடியும்.

தற்போது அதற்கான வசதியை இந்திய தொலைத்தொடர்பு துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

அரசு தொலைத்தொடர்பு இணைய தளத்தை பயன்படுத்துவது எப்படி?

உங்கள் மொபைல் அல்லது லேப்டாப்பில் tafcop.dgtelecom.gov.in என்ற அரசு இணையதளத்திற்கு செல்லவும்.

உங்கள் பெயரில் எத்தனை சிம் கார்ட் உள்ளது என அறிய https://tafcop.sancharsaathi.gov.in/telecomUser/ இணையதளத்திற்கு செல்லவும்

அதில் உங்கள் பத்து இலக்க மொபைல் எண்ணை உள்ளிடவும்.

பிறகு மொபைல் எண்ணிற்கு ஒரு OTP ஒன்று வரும். அதை பதிவு செய்து சரிபார்க்கவும்.

இப்போது உங்கள் ஐடியில் இருந்து இயங்கும் அனைத்து எண்களின் விவரங்களும் வரும். பட்டியலில் உங்களுக்குத் தெரியாத எண் இருந்தால், அதைப் புகாரளிக்கலாம்.

இது குறித்து புகாரளிக்க ‘எனது எண் அல்ல’ என்ற விருப்பத்தை தேர்வு செய்து அதை புகார் செய்யலாம்

பிறகு அந்த எண்ணை அரசு தொலைத்தொடர்பு துறை பிளாக் செய்து விடும்.

check how many sim card on my name CLIK Here

https://tafcop.sancharsaathi.gov.in/telecomUser/

Tags: தொழில்நுட்பம் முக்கிய செய்தி

Give Us Your Feedback