Breaking News

தினமும் 4 மணி நேரம் போர் நிறுத்தம் இஸ்ரேல் பிரதமர் ஒப்புதல்

அட்மின் மீடியா
0

அக். 7-ம் தேதி இஸ்ரேல் மீது காஸா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அதிகாரப்பூர்வமாக போர் அறிவித்து ஒரு மாதத்துக்கும் மேலாக காஸா மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. 

பாலஸ்தீனில் இதுவரை 10,328 பேர் பலியானதாக பாலஸ்தீன சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதில், 4,237 பேர் குழந்தைகள் ஆவார்கள்

ஹமாஸ் அமைப்பினரின் கோட்டையாகத் திகழும் காஸா சிட்டிக்குள் நுழைந்து அந்த நகரை நோக்கி இஸ்ரேல் ராணுவம் முன்னேறி வருகிறது.இதனிடையே காஸா சிட்டியிலும் வடக்கு காஸா பகுதிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் தெற்கு காஸாவுக்கு வெளியேற இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டது. 



இந்நிலையில், பொதுமக்கள் பாதுகாப்பான பகுதிக்கு வெளியேறுவதற்கு வசதியாக தினமும் 4 மணி நேரத்துக்கு தாக்குதல் நிறுத்தம் மேற்கொள்ள இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அரசு தற்போது அறிவித்துள்ளது. 

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தொலைபேசி மூலம் அதிபர் ஜோ பைடன் தொடர்பு கொண்டார். அப்போது, காஸாவிலிருந்து பொதுமக்கள் வெளியேறுவதற்கு வசதியாக தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு அந்தப் பகுதியில் தாக்குதலை நிறுத்திவைக்க வேண்டும்” என்று நெதன்யாகுவை பைடன் கேட்டுக்கொண்டார்.அதனை ஏற்று, தினமும் 4 மணி நேரத்துக்கு காஸாவில் தாக்குதலை நிறுத்திவைக்க இஸ்ரேல் அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback