Breaking News

உத்தரகண்ட் சுரங்கத்தில் இருந்து 41 தொழிலாளர்களும் மீட்பு..! வீடியோ

அட்மின் மீடியா
0

உத்தரகண்ட் சுரங்கத்தில் இருந்து 41 தொழிலாளர்களும் மீட்பு..!

உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள உத்தரகாசியில், பிரம்மகால் – யமுனோத்ரி நெடுஞ்சாலை பகுதியில், சில்க்யாரா – தண்டல்கான் பகுதிக்கு இடையே சுரங்கபணிகள் நடைபெற்று வந்தது.


விபத்து:-

இந்த சுரங்கப் பாதை பணி நடந்து கொண்டு இருந்த போது சுரங்கபாதையின் நடுவில் கடந்த 12 ம் தேதி திடீரென மண் சரிவு ஏற்பட்டது. இதனால் சுரங்கப் பாதையின் நடுவே பணியாற்றிய 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர். 

மேலும் அந்த சுரங்கப் பாதைக்குள் சுமார் 1.5 கி.மீ. தொலைவு நீளம் உள்ளது இதனால் அவர்களின் உயிருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, 

தற்போது 70 மீட்டர் தொலைவுக்கு மணல், கடினமான பாறைகள் சுரங்கத்தை மூடியிருக்கிறது. உட்பகுதியில்  1.5 கி.மீ தொலைவுக்கு மண் சரிவு இல்லை. அந்த பகுதியில்தான் 41 தொழிலாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர். 

அங்கு மின் விளக்கு வசதி இருக்கிறது. ஏற்கெனவே அமைக்கப்பட்ட குழாய்கள் வழியாக ஆக்சிஜன், உணவு வகைகள் அனுப்பப்படுகிறது.

மீட்பு பணி:-

சுரங்கத்தில் சிக்கி கொண்ட அந்த 41 பேரையும் மீட்க கடந்த 17 நாட்களாக பேரிடர் மீட்பு பணியினர் மும்முரமாக முயற்சித்து வந்தனர்

அவர்களை மீட்க முன்னதாக தோண்டப்பட்ட சுரங்கபாதையில் இடையில் பாறை இருந்தததால் மீட்பு பணி தடைபட்டது. சுரங்கத்தில் சிக்கி இருப்பவர்களுக்கு ஆக்சிஜன் மற்றும் உணவு பொருட்கள் ஆகியவை அனுப்ப சிறிய அளவிலான சிறிய பைப் போடப்பட்டுள்ளது.அதன் வழியாக தற்போது வரை ஆக்சிஜன், அவர்களுக்கு தேவையான உணவுகள் தேவையான மருந்துகள் அனுப்பப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது 17 நாட்கள் போராட்டத்துக்குப் பின் 41 தொழிலாளர்களை மீட்டுள்ளார்கள்

சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்டு வெளியே வந்த தொழிலாளர்களை மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி மாலையிட்டு வரவேற்று, அவர்களிடம் நலம் விசாரித்தார். தற்போது தொழிலாளர்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்வதில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.மேலும் தொழிலாளர்கள் வீடு திரும்பும் வரை மருத்துவ உதவிகள் அளிக்கப்படும் எனவும் மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களுக்கும் ரூ.1 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என - உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர்சிங் தாமி அறிவித்துள்ளார்

வீடியோ பார்க்க:-

கிளிக் செய்யவும்

https://twitter.com/ParthThackerBJP/status/1729542155361018061

Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ

Give Us Your Feedback