தமிழக காவல் துறையில் புதிதாக தீவிரவாத தடுப்பு பிரிவு அமைக்க தமிழக அரசு உத்தரவு
தமிழக காவல் துறையில் புதிதாக தீவிரவாத தடுப்பு பிரிவு அமைக்க தமிழக அரசு உத்தரவு
தமிழ்நாடு காவல்துறையில் தீவிரவாத தடுப்பு பிரிவு தொடங்குவதற்கு தமிழ்நாடு அரசு சுமார் 60 கோடி 12 லட்சம் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
தமிழகத்தில் தீவிரவாத செயல்களை தடுத்து நிறுத்த காவல்துறையில் தீவிரவாத தடுப்பு பிரிவு உருவாக்கப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.
தீவிரவாதத்தை தடுக்க மாநில அளவில் புதிய பிரிவை உருவாக்கி தமிழ்நாடு அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசானையில்:-
நுண்ணறிவு பிரிவு ஏடிஜிபிக்கு கீழ் இந்த புதிய தீவிரவாத தடுப்பு பிரிவு (ATS) செயல்படும் எனவும்.புதிய தீவிரவாத தடுப்பு பிரிவில் 1 டிஐஜி, 4 எஸ்பிக்கள், 5 ஏஎஸ்பிக்கள், 13 டிஎஸ்பிக்கள், 31 ஆய்வாளர்கள், 61 உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் என மொத்தம் 383 பேர் செயல்படுவார்கள் என்று அரசானையில் அறிவிக்கப்பட்டுள்ளது
அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள
Follow as on google news :- CLICK HERE
Tags: தமிழக செய்திகள்