பெங்களூரு ஓட்டல் குண்டுவெடிப்பு சந்தேக நபர் தொடர்பான சிசிடிவி வீடியோ
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஒயிட்பீல்டு அருகே குந்தலஹள்ளி பகுதியில் பிரபல ராமேஸ்வரம் கபே ஓட்டல் செயல்பட்டு வருகிறது. பெங்களூருவில் பிரபலமான ஓட்டல் என்பதால் எப்போதும் இங்கு மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்
பெங்களூரு - ஒயிட் ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் CCTV காட்சி வெளியீடு! கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே, இந்திரா நகரில் ராமேஸ்வரம் கஃபே என்ற ஹோட்டல் இயங்கி வருகிறது. இன்று (01.03.2024) திடீரென அக்கடையில் இருந்து பயங்கர சத்தத்துடன் மர்ம பொருள் வெடித்து சிதறியது.
இதனால் அப்பகுதி முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. வெடி விபத்தில் குறைந்தது 9 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களில் மூன்று ஊழியர்களும் ஒரு வாடிக்கையாளர்களும் அடங்குவர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்,
சிலிண்டர் வெடித்து கஃபே மற்றும் அதைச் சுற்றி கறுப்புப் புகையை ஏற்படுத்தியதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவித்த நிலையில் ராமேஸ்வரம் கஃபேவில் வெடித்தது வெடிகுண்டு தான் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா உறுதி செய்துள்ளார்.
வாடிக்கையாளர் போல வந்தவர் வைத்திருந்த பையில் இருந்த வெடிகுண்டு தான் வெடித்தது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார்.
இந்நிலையில், பெங்களூரு ஓட்டல் குண்டு வெடிப்பு தொடர்பாக சந்தேக நபர் தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.
சந்தேகிக்கப்படும் நபர் தனது கையில் பையுடன் முகக்கவசம், கண்ணாடி, தொப்பி அணிந்தவாறு நேற்று மதியம் 12.30 மணியளவில் ஓட்டலுக்கு வந்துள்ளார். அந்த நபர் ஓட்டலில் அங்கு உள்ள இருக்கையில் அமர்ந்து சாப்பிட்டுள்ளார். பின்னர், ஓட்டலை ஒட்டியுள்ள மரம் அருகே அமைந்துள்ள கை கழுவும் இடத்தில், தான் கொண்டுவந்த பையை வைத்துவிட்டு வெளியேறியுள்ளார்.
அந்த நபர் வெளியேறிய ஒருமணி நேரத்தில் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்துள்ளன.
இது தொடர்பான சி.சி.டி.வி. காட்சிகள், புகைப்படங்களை கொண்டு சந்தேக நபர் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பையை வைத்து சென்ற சந்தேக நபருடன் மற்றொரு நபர் ஓட்டலில் பேசுவது போன்ற சி.சி.டி.வி. காட்சிகள் கிடைத்த நிலையில் ஓட்டலில் சந்தேக நபரிடம் பேசியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் ஓட்டலில் பையை வைத்து சென்ற நபர் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://twitter.com/AskAnshul/status/1763546645827055910
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://twitter.com/AdityaRajKaul/status/1763548730861773058/video/2
சந்தேக நபர் தொடர்பான சிசிடிவி. வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://twitter.com/MrJAT_75/status/1763775800883748983/video/1
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் வைரல் வீடியோ