Breaking News

நாடாளுமன்ற தேர்தல் பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு! முக்கிய அம்சங்கள் முழு விவரம் BJP Manifesto 2024

அட்மின் மீடியா
0

நாடாளுமன்ற தேர்தல் பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு! BJPManifesto


பிரதமர் மோடி, ஜே.பி. நட்டா, அமித்ஷா, ராஜ்நாத் சிங் முன்னிலையில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது தேர்தல் அறிக்கையில் மோடி கேரண்டி" என அச்சிடப்பட்டுள்ளது


முக்கிய சிறப்பு அம்சங்கள்:-

நாடு முழுவதும் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும்

ஒரே நாடு ஒரே தேர்தல்

நாடு முழுவதும் பொதுவான வாக்காளர் பட்டியல் கொண்டு வரப்படும்

சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கும் உஜ்வாலா திட்டம் நீடிக்கப்படும்

கிராமங்களில் பைப் மூலம் கேஸ் விநியோகம் செய்யும் திட்டம் .

5 ஆண்டுகளுக்கு ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும்

2025 பழங்குடியினரின் ஆண்டாக கடைப்பிடிக்கப்படும்

இந்தியாவின் கௌரவமான தமிழ்மொழி வளர்க்கப்படும்

சூரிய ஒளி மூலம் மின்சாரம் வழங்கும் திட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படும்

மத்திய அரசின் காப்பீட்டுத் திட்டத்தில் திருநங்கைகள் இணைக்கப்படுவர்,

மானிய விலையில் கேஸ் சிலிண்டர்

70 வயதுக்கு மேல் உள்ள அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் காப்பீடடு வழங்கப்படும்

நாட்டில் காய்கறிகள் அரிசி பருப்பு உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை சமநிலையில் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்

ஏழை குடும்பத்தின் வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்:

மக்கள் மருந்தகத்தில் 80% தள்ளுபடி விலையில் மருந்துகள் வழங்கப்படும்

2036ஆம் ஆண்டில் இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடத்த நடவடிக்கை

சானிட்டரி நாப்கின் 1 ரூபாய்க்கு வழங்கப்படும்

வடகிழக்கு மாநிலங்களுக்கு புல்லட் ரயில் சேவை. படுக்கை வசதி கொண்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும்

கருப்பை வாய் புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

பிரதமர் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் 3 கோடி வீடுகள் கட்ட நிதி ஒதுக்கப்படும்

முத்ரா கடன் வரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தப்படும்

 BJP Manifesto 2024 PDF CLICK HERE

https://www.bjp.org/bjp-manifesto-2024

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback