முதல்வர் ஸ்டாலினுக்காக சாலை தடுப்புச் சுவரை தாண்டி குதித்து ஸ்வீட் வாங்க சென்ற ராகுல் காந்தி வைரல் வீடியோ பார்க்க
முதல்வர் ஸ்டாலினுக்காக ராகுல் காந்தி இனிப்பு வாங்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது
மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி கோவையில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
கோவை செட்டி பாளையம் பகுதியில் நடந்த பிரச்சார கூட்டத்தில் தமிழக முதல்வர் மற்றும் இந்தியா கூட்டணி தலைவர்கள் உள்ளிட்ட பலர் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
பிரச்சாரத்திற்கு வரும் வழியில் முதல்வர் ஸ்டாலினுக்காக விக்னேஸ்வரா இனிப்பகத்தில் இனிப்பு வாங்கும் வீடியோவை ராகுல் காந்தியை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
சிங்காநல்லூர் பகுதியில் சாலை தடுப்பு சுவரைத் தாண்டி குதித்து ஸ்வீட் கடைக்குள் நுழையும் ராகுல் காந்தி அங்குள்ள ஊழியர் ஊழியர்கள் , கடை உரிமையாளர் ஆகியோருடன் கைகுலுக்கி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.
இதை தொடர்ந்து யாருக்காக ஸ்வீட் வாங்குகிறீர்கள் சார் என்று கடையில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் கேட்க எனது சகோதரர் ஸ்டாலினுக்காக என்று ராகுல் காந்தி பதிலளிக்கிறார்.
கடையின் ஊழியர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு அங்கிருந்து விடை பெற்றுக்கொண்ட ராகுல் காந்தி கோவை பொதுக்கூட்டத்தில் தான் வாங்கி வந்த இனிப்பை முதல்வர் ஸ்டாலினிடம் கொடுத்து அவரை கட்டியணைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://twitter.com/Vinosh_Pinku/status/1778839548203561360
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்