Breaking News

நாள் முழுவதும் ஊட்டியை சுற்றிபார்க்க 100 ரூபாய் போதும் - தமிழக அரசின் சுற்றுலா பேருந்து முழு விவரம்

அட்மின் மீடியா
0

ஊட்டிச்கு சுற்றுலா செல்லும் பயணிகளின்  ஊட்டியில் உள்ள சுற்றுலா தலங்களை குடும்பத்தினருடன் கண்டுகளிக்க 100 ரூபாயில் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுலா பேருந்தில் ஊட்டியில் பல்வேறு இடங்களை கண்டு ரசிக்கலாம். மேலும் இந்த சுற்றுலா பேருந்தில் நீங்கள் உங்களுக்கு எந்த இடத்தை சுற்றி பார்க்க வேண்டுமோ அங்கே இறங்கி பார்த்து விட்டு அடுத்த பேருந்தில் ஏறி கொள்ளலாம்.



ஊட்டியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களை காண இந்த பேருந்து சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

சுற்றுலா பயணிகள் சுற்றுலா தலங்களில் தாங்கள் விரும்பும் நேரம் வரை பார்வையிட்டுவிட்டு மற்றொரு சுற்றுலா தளத்திற்கு வேறு ஒரு  பேருந்தில் கட்டணம் இன்றி அதே பயண அட்டை மூலம் பயணம் செய்யலாம். ஒரு நாள் முழுவதும் ஒரு சுற்றிற்கு இந்த அட்டையை பயன்படுத்தி பயணம் செய்யலாம்.

ஊட்டி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து

1. தாவரவியல் பூங்கா

2. படகு இல்லம்

3. ரோஜா பூங்கா

4. தொட்டபெட்டா சிகரம்

5. தேயிலை தோட்டம்

6. தேயிலை அருங்காட்சியகம்

வரை இந்த பேருந்துகள் இயக்கப்படுகின்றன. 

டிக்கெட்டிற்கு பதிலாக பாஸ் வழங்கப்படும். உங்களுக்கு எந்த இடத்தை சுற்றி பார்க்க வேண்டுமோ அங்கே இறங்கி பார்த்து விட்டு அடுத்த பேருந்தில் ஏறி கொள்ளலாம்.

கட்டணம்:-

பெரியவர்களுக்கு 100 ரூபாய்

சிறியவர்களுக்கு 50 ரூபாய்

மேட்டுப்பாளையத்தில் இருந்து 5 நிமிடத்திற்கு ஒருமுறை ஊட்டிக்கு ஒரு பேருந்து இயக்க போக்குவரத்து துறை நடவடிக்கை எடுத்துள்ளது.கோவையில் இருந்தும் ஊட்டிக்கு பேருந்து வசதி அதிகப்படுத்தப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், "உதகைக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் கவனத்திற்கு..கோவை அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கோடை காலம் முழுவதும் சுற்றுலா தலங்களை குடும்பத்தினருடன் பாதுகாப்பாகவும் குறைந்த கட்டணத்திலும் கண்டு களிக்க சுற்று பேருந்து இயக்கப்படுகிறது.

விரும்பிய சுற்றுலா தலங்களில் இறங்கி, விரும்பிய நேரம் வரை சுற்றிப் பார்க்கலாம். பின்னர் வேறு ஒரு சுற்றுப்பேருந்தில் ஏறி கட்டணமின்றி பயணிக்கலாம். ஒரு நாள் முழுவதும் இந்த அட்டையை பயன்படுத்தி சுற்றுப் பேருந்துகளில் பயணித்து சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கலாம்" என தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback