Breaking News

ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் எடுக்க விண்ணப்பிப்பது எப்படி - வழிகாட்டு நெறிமுறைகள் என்ன முழு விவரம் E Pass For Ooty Apply Online | kodaikanal e pass 2024 registration online

அட்மின் மீடியா
0

ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் எடுப்பது எப்படி வழிகாட்டு நெறிமுறைகள் என்ன முழு விவரம்


ஊட்டி, கொடைக்கானலில் குவியும் சுற்றுலாப் பயணிகள் கூட்டத்தை கட்டுப்படுத்த இபாஸ் வழங்கும் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் எனவும் மே 7 முதல் ஜூன் 30 வரை இபாஸ் நடைமுறையை அமல்படுத்த வேண்டும் எனவும் உள்ளூர் மக்களுக்கு இதற்கு விலக்கு அளிக்க வேண்டும். என நீலகிரி, திண்டுக்கல் ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டு இருந்தனர்

இ பாஸ் பெற விண்ணப்பிக்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://epass.tnega.org/

இ-பாஸ் எடுக்க விண்ணப்பிப்பது எப்படி

முதலில் மேல் உள்ள லின்க் கிளிக் செய்யவும்

அடுத்து அதில் TN ePass நீங்கள் எங்கே இருந்து வருகிறீர்கள் / Where are you Coming From Card Image icon இந்தியாவுக்கு வெளியில் இருந்து / Outside India Card Image icon இந்தியாவுக்கு உள்ளே / Within India செலக்ட் செய்யவும்

அடுத்து உங்கள் மொபைல் எண் பதிவிட்டு கீழ் உள்ள கேப்சாவை பதிவிட்டு சப்மிட் கொடுக்கவும்

அடுத்து உங்கள் மொபைலுக்கு வரும் ஒடிபி பதிவிட்டு சப்மிட் கொடுக்கவும்

அடுத்து வரும் பக்கத்தில் நீங்கள் செல்ல விரும்பும் இடம் / Choose your destination Card Image நீலகிரி / Nilgiris Card Image கொடைக்கானல் / Kodaikanal Card Image உள்ளூர் பாஸ் / Localite Pass Card Image முந்தைய பாஸ்கள் / Previous Passes உங்கள் விருப்பத்தை செலக்ட் செய்யவும்

அதன்பின்பு வரும் விண்ணப்ப படிவத்தில்

விண்ணப்பதாரர் பெயர் / Applicant Name 

வருகையின் காரணம் / Purpose of Visit 

வாகன பதிவு எண் / Vehicle Registration Number 

மொத்த பயணிகளின் எண்ணிக்கை / Number of Passengers 

வாகன உற்பத்தி வருடம் / Year of Manufacture 

வாகன வகை / Vehicle Type 

எரிபொருள் வகை / Fuel Type 

உள் நுழையும் நாள் / Date of Entry 

வெளியேறும் நாள் / Date of Exit 

நாடு / Country மாநிலம் / State 

மாவட்டம் / District 

முகவரி 1 / Address Line 1 

முகவரி 2 / Address Line 2 

அஞ்சல் குறியீ டு / Pincode 

தங்கும் இடம் எங்களுக்கு தெரியும் / I know my place of stay 

தங்கும் இடம் இன்னும் தெரியாது / I don't know my place of stay

போன்றவற்றை சரியாக பதிவிட்டு சப்மிட் கொடுக்கவும் அதன்பின்பு உங்கள் இ பாஸ் திரையில் வரும் அதனை பிரிண்ட் எடுத்து கொள்ளவும் அவ்வளவுதான்

kodaikanal e pass 2024 registration online

இந்நிலையில் ஊட்டி, கொடைக்கானல் செல்ல இ-பாஸ் எடுப்பது எப்படி வழிகாட்டு நெறிமுறைகள் என்ன என்பது குறித்து தமிழக அரசு அறிவித்துள்ளது அதன்படி 

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும்

ஒரு வாகனத்திற்கு ஒரு இ-பாஸ் மட்டுமே போதுமானது

இந்த நடைமுறை மே 7 முதல் மே 30 வரை சோதனை முறையில் அமல்படுத்தப்படுகிறது.

அரசு பேருந்தில் நீலகிரி வருபவர்களுக்கு இ-பாஸ் அவசியமில்லை.

வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தங்களது மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்தும், உள்நாட்டு மக்கள் தொலைபேசி எண்ணை பதிவு செய்தும் இபாஸ் பெற்றுக் கொள்ளலாம்.

நீலகிரி மாவட்ட பதிவு எண் (TN43) கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை. வெளி மாவட்ட வாகனங்களை நீலகிரிக்கு மாற்றம் செய்திருப்பவர்கள், அதற்கான ஆவணங்களுடன் உதகை ஆர்.டி.ஓ. அலுவலகத்தை அணுகி இ-பாஸ் பெறலாம் என வட்டார போக்குவரத்து அலுவலர் அறிவித்துள்ளார்

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு வருகை தரும் அனைத்து வாகனங்களும் வெள்ளிநீர்வீழ்ச்சி அருகில் உள்ளசுங்கச்சாவடியில் இ-பாஸ் சோதனை மேற்கொண்ட பின்னரே கொடைக்கானலுக்குள் செல்ல 07.05.2024 முதல் 30.06.2024 வரை அனுமதிக்கப்படுவர். சுங்கச்சாவடியில் பணிபுரியும் பணியாளர்கள் மொபைல் செயலி மூலம் இந்த கியூ ஆர் கோட்-ஐ ஸ்கேன் செய்து அந்த சுற்றுலா பயணிகளின் பயண விவரங்களை தெரிந்துகொள்வதோடு, இந்த நடைமுறையினை கண்காணிக்கவும் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இ பாஸ் தொடர்பான துரித நடவடிக்கைக்கு வெள்ளிநீர்வீழ்ச்சி சுங்கச்சாவடி அருகில் நகராட்சி அலுவலர்கள், காவல் துறை மற்றும் வட்டார போக்குவரத்துத் துறைஅலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு 07.05.2024 முதல் 30.06.2024 வரை வருகை புரியும் அனைத்து வாகனங்களுக்கும் "epass.tnega.org" என்ற இணைய முகவரி மூலம் 06.05.2024 காலை முதல் இ-பாஸ் பெற்றுக்கொள்ளலாம், என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதிமொ.நா.பூங்கொடி, இ.ஆ.ப.,அவர்கள் தெரிவித்துள்ளார்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback