ஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் ..எப்படி விண்ணப்பிப்பது.... how to apply community certificate online
ஜாதி வருமான இருப்பிட சான்றிதழ் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம் நமக்கு தேவையான அரசு சான்றிதழ்கள் வாங்க இனி தாலுக்கா அலுவலகம் செல்லவேண்டாம். அனைத்து சான்றிதழ்களும் இனி உங்கள் மொபைல் போனில் விண்ணப்பிக்கலாம்
விண்ணப்பிப்பது எப்படி?
முதல் நிலை
முதலில் https://tnega.tn.gov.in/ அதில் Citizen Login என்பதை க்ளிக் செய்யவும்.
ஏற்கனவே account இருப்பவர்கள் user name password கொடுத்து என்டர் செய்யவும்.Captcha Code என்பதில் சரியானவற்றை கொடுத்து லாகின் செய்யவும்
அக்கவுண்ட் இல்லாதவர்கள் புதிதாக Account ஓபன் செய்யவும். அதில் new user? sign up என்ற ஆப்ஷனில் புதிதாக அக்கௌன்ட் ஓபன் செய்யலாம்.
அக்கவுன் ஓப்பன் செய்து லாகின் செய்து அதில் Revenue Department என்பதை செய்யவும்.
அதில் தேவையான சான்றிதழை தேர்வு செய்து Proceed என்பதை க்ளிக் செய்யவும்.
இரண்டாம் நிலை
அடுத்து அதில் Register can என்பதை க்ளிக் செய்யவும்.
அடுத்து அவரும் விண்ணப்ப படிவத்தில் விண்ணப்பதாரரின் பெயர், பாலினம், திருமண நிலை, பிறந்த தேதி, உறவு முறை, தந்தை/ தாய் பெயர், மதம், கல்வி தகுதி, சாதி, வட்டம், மாவட்டம், கிராமம், நிரந்தர வீட்டு முகவரி, மொபைல் எண் கொடுத்து Generate OTP என்பதை கொடுத்த பிறகு மொபைல் எண்ணிற்கு வரும் OTP எண்னை கொடுத்து ரெஜிஸ்டர் என்பதை க்ளிக் செய்யுங்கள்
அடுத்து உங்களுக்கு can நம்பர் ரெஜிஸ்டர் செய்த மொபைல் எண்ணை கொடுத்து விவரங்களை குறிப்பிட்ட பிறகு search ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
அதில் உங்களுடைய பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி அனைத்தும் அவ்ரும் அடுத்து அதில் Proceed என்பதை க்ளிக் செய்யவும்.
அடுத்து உங்களுடைய மொபைல் எண் வரும். அருகில் இருக்கும் generate otp என்பதை கொடுத்த பிறகு மொபைல் எண்ணிற்கு வரும் ஒடிபியை கொடுத்து conform OTP என்ற ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும் அடுத்து கீழே proceed என்ற ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.
மூன்றாம் நிலை
அதில் கரன்ட் கோர்ஸ் என்ற இடத்தில் கிராட்சூவேட் என்பதை கொடுத்து கல்வி நிறுவனத்தின் பெயர், முகவரியை டைப்செய்ய வேண்டும். அனைத்தையும் சரிபார்த்து சப்மிட் கொடுக்கவும்
அடுத்து உங்களுடைய ஆவணங்களை அப்லோட் செய்யும் ஆப்ஷன் வரும். அதில் கேட்கபட்டுள்ள அனைத்து ஆவணங்களையும் அப்லோடு செய்யுங்கள்
அதில் Self Declaration Form , Download Aadhar Consent Form டவுன்லோடு செய்து கஎயொப்பம் இட்டு மீண்டும் ஸ்கேன் செய்து அப்லோடு செய்யவேண்டும்
வதற்கு Download Self Declaration Form என்பதை க்ளிக் செய்யவும் அவற்றில் உங்களுடைய கையெழுத்து போட வேண்டும்.
ஜந்தாம் நிலை
ஆவணங்கள் அப்லோட் செய்த பிறகு Make payment என்பதை கொடுக்க வேண்டும்.
அதில் நெட் பேங்கிங் , யூபிஜ , டெபிட் கார்டு போன்றவைகள் ஏதேனும் பயன்படுத்தி ஆன்லைன் மூலம் பணத்தினை செலுத்த வேண்டும்.
பணம் செலுத்திய பிறகு ஒப்புகை சீட்டு வரும். அவ்வளவுதான்
அடுத்து உங்களுக்கு வந்த ஒப்புகை சீட்டை எடுத்து கொண்டு உங்கள் பகுதி விஏஓ, மற்றும் ஆர்.ஜ சரிபார்ப்பு முடிந்து தாசில்தார் ஒப்புகை கொடுத்தபின்பு உங்கள் முதல் பட்டதாரி சான்றிதழ் டவுன்லோடு செய்யலாம் அவ்வளவுதான்
இவ்வாறு இணையதளத்தில் அப்ளை செய்தால், அப்ளை செய்த சில நாட்களுக்குள் நீங்கள் விண்ணப்பித்த சான்றிதழை பெற்று கொள்ளலாம்.
Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி