Breaking News

அயலக தமிழர்கள் அடையாள அட்டை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் முழு விவரம் NRT ID Card

அட்மின் மீடியா
0

தமிழர்கள் வணிகத்தின் பொருட்டும், பயணங்களின் பொருட்டும், குடியமர்வின் பொருட்டும், தொன்றுதொட்டு அயல்நாடுகளுக்குச் சென்றுள்ளனர். பொருளாதார காரணங்களுக்காகவும், பொருளாதாரம் உலக மயமாக்கப்பட்டதன் காரணமாகவும், வேலை தேடியும், வாழ்வாதாரத்திற்காகவும் ஒவ்வொரு வருடமும், அதிக எண்ணிக்கையில் தமிழர்கள் வெளிநாடுகளுக்கு இடம் பெயர்ந்து செல்கின்றனர்.

அவர்களுக்காக தமிழகத்தில் அயலகத் தமிழர் நலன் & மறுவாழ்வுத்துறை ஆணையரகம் உள்ளது மேலும்  இந்தியாவிலும் வெளிநாட்டிலும் வசிக்கும் தமிழர்களுக்காக தமிழ்நாடு புலம்பெயர்ந்த தமிழர்கள் நல வாரியம் அமைக்கப்பட்டுள்ளது

இந்த ஆணையரகம் வெளிநாடுகளில் உள்ள பல்வேறு இந்திய தூதரகங்களுடன் ஒருங்கிணைத்து, கீழ்கண்ட பணிகளை செயல்படுத்தி வருகிறது.

வெளிநாடு வாழ் தமிழர்களின் குறைகளை தீர்ப்பது

துன்பத்தில் இருக்கும் தமிழர்களுக்கு உதவுதல்

அயல்நாடு முதலாளியிடமிருந்து அவர்களின் கோரிக்கைகளைத் தீர்ப்பதில் உதவுதல்

வெளிநாடுகளில் இறக்கும் புலம்பெயர் தமிழர்களின் சடலங்களை, வெளிநாடுகளில் உள்ள அந்தந்த இந்திய தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து, தமிழ்நாட்டிற்கு கொண்டு வர உதவுவது ஆகும்

மேலும் நல வாரியம் மூலம் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கப்படுகின்றது, மேலும் கல்வி உதவிதொகை, திருமண உதவி தொகை, காப்பீடு என பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தி வருகின்றது

அதன் பயனை பெற வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள் அயலக தமிழர் நல வாரியத்தில் உறுப்பினராக இணையலாம். இதுகுறித்து அயலகத் தமிழர் நலத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், 

வேலைவாய்ப்பு, கல்வி, வணிகம் போன்ற காரணங்களுக்காக தமிழர்கள் அயல்நாடுகளுக்கு புலம்பெயர்வது சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. இவ்வாறு புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் வாழும் தமிழர்களின் நலன் காக்க தமிழ்நாடு முதல்வரின் ஆணையின்படி ‘அயலகத் தமிழர் நல வாரியம்’ அமைக்கப்பட்டுள்ளது. அவ்வாரியம் மூலம் அயலகத்தில் உள்ள தமிழர்களுக்கென பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது.

அயலகத் தமிழர் நல வாரியத்தில் உறுப்பினர் பதிவு18 முதல் 55 வயது வரை உள்ள அயலகத் தமிழர்கள், அயலகத் தமிழர் நலத்துறையின் வலைதளத்தில் (https://nrtamils.tn.gov.in) ஒரு முறை பதிவு கட்டணமாக ரூ.200/- செலுத்தி கீழ்க்கண்ட இரண்டு பிரிவுகளில் ஏதேனும் ஒன்றின் மூலம் வாரியத்தில் உறுப்பினராக இணைந்து அடையாள அட்டையினை பெறலாம்.இந்த அடையாள அட்டை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்பட வேண்டும்.

அயல்நாடுகள் மற்றும் வெளிமாநிலங்களுக்கு புலம்பெயர்ந்த மற்றும் புலம்பெயரவுள்ள தமிழர்கள், அயலகத் தமிழர் நலவாரியத்தில் உறுப்பினராக இணைந்து அரசின் நலத்திட்டங்களை பெற்றிடலாம்

காப்பீடு திட்டம்:-

அயலகத் தமிழர் காப்பீடு என்றால் என்ன?அயலகத் தமிழர்களுக்கான காப்பீட்டு திட்டமானது (வெளிநாடுகளிலும், இந்தியாவிலும் வாழும் அயலகத் தமிழர்களுக்கு காப்பீட்டுத் தொகையை வழங்கும் திட்டமாகும். விண்ணப்பதாரர் பதிவுசெய்யப்பட்ட அயலகத் தமிழர் அடையாள அட்டை வைத்திருப்பவராக இருந்தால் மட்டுமே அயலகத் தமிழர் காப்பீடு பெற முடியும்.

அடையாள அட்டை வைத்திருப்பவருக்கு குறைந்தபட்சம் ரூ.1,00,000/-க்கான தீவிர நோய்க்கான காப்பீடு

கட்டாயமற்ற கூடுதலான தனிநபர் விபத்து காப்பீடு ரூ.10,00,000/- வரை.புற்றுநோய், சிறுநீரக செயலிழப்பு, பக்கவாதம் உள்ள பல தீவிர நோய்கள் அடங்கும். (இந்தப் பக்கத்தின் முடிவில் விரிவான பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது).

தீவிர நோய்க்கான காப்பீட்டுத் தொகைக்கான குறைந்த வருடாந்திர கட்டணத் தொகை ரூ.350 (18% சரக்கு மற்றும் சேவை வரியைத் தவிர்த்து).கட்டாயமற்ற தனிநபர் விபத்துக் காப்பீட்டுத் திட்டத்திற்காக ரூ.395 (18% சரக்கு மற்றும் சேவை வரியைத் தவிர்த்து) குறைந்த வருடாந்திர கட்டணத் தொகை.ரூ.1,750 கட்டணத் தொகை செலுத்தி தீவிர நோய்க்கான காப்பீட்டை ரூ.5,00,000/- வரை அதிகரிக்கலாம். (பக்கத்தின் முடிவில் விரிவான பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது).

விண்ணப்பதாரர் 18 முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். கட்டாயமற்ற தனிநபர் விபத்துக் காப்பீட்டிற்கு, 18 முதல் 70 வயதுக்குள் இருக்க வேண்டும்.வேலை தொடர்பான சரியான ஆவணங்கள் இருக்க வேண்டும்.

கல்வி உதவித்தொகை 

அயல்நாடுகளுக்கு பணியின் பொருட்டு சென்று அங்கு இறக்கும் குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த தமிழர்களின் குடும்பத்திலுள்ள கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்விக்கான சிறந்த வாய்ப்புகளை வழங்குவதற்கும், உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அவர்களின் விகிதத்தை அதிகரிப்பதற்கும், கல்வியின் அவர்களின் ஆர்வத்தினை அதிகரிப்பதுமே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். 

தமிழ்நாடு அரசின் பத்தாம் வகுப்பு (10வது), 

மேல்நிலை இரண்டாம் ஆண்டு (12வது) தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் அல்லது அயல்நாடுகளில் அதற்கு இணையான படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள்.

மருத்துவக் கல்லூரி படிப்பு / பொறியியல், பட்டப்படிப்பு / வேளாண்மை பொறியியல் (Agri. Eng) மற்றும் ஏதேனும் ஒரு துறை, டிப்ளமோ படிப்பு ஏதேனும் ஒரு துறையில் அல்லது அதற்கு இணையான படிப்புகள்

அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் மூலம் தொழிற்கல்விப் படிப்புகள் / பாலிடெக்னிக்குகள் (Polytechnic) / தொழில் பயிற்சி பெற்றவர்கள்.கல்வி நிறுவனங்களில் சேர்க்கை (Admission) பெற்ற மாணவர்கள் மட்டுமே இக்கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவராவார்கள்.

அயலகத் தமிழர் நலவாரியத்தில் பதிவு பெற்று, பதிவு காலாவதியாகமல் உள்ள (இறப்பின் போது) அயலகத் தமிழரின் குழந்தைகளுக்கு வழங்கப்படும்.முறையான வேலை வாய்ப்பு ஆவணங்களுடன் அயல்நாடுகளில் பணிப்புரிந்து மரணமடைந்த தமிழர்களின் குழந்தைகளுக்கு தமிழ்நாட்டில் உள்ள கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் நிலையில் அம்மாணவர்களுக்கு மட்டுமே உதவித்தொகை வழங்கப்படும்.

கல்லூரி / பல்கலைக்கழகம் / நிறுவனத்தினால் தீர்மானிக்கப்படும் வருகையினை அளவுகோலை மாணவர்கள் தவறாமல் பெற்றிருக்க வேண்டும்.பல கல்லூரிகளில் இரண்டு கட்டமாக / அரையாண்டு கட்டணமாக, கல்விக் கட்டணம் வசூலிக்கப்படுவதால், கல்வி ஆண்டின் துவக்கத்தில் முழு ஆண்டிற்கான செலவீன விவரம் கல்லூரி முதல்வரின் ஒப்புதலுடன் பெற்று வழங்கப்பட வேண்டும்.

மாணவர் உதவித்தொகைக்கான விதிமுறைகள் அல்லது நிபந்தனைகளை மீறியிருந்தால், அவர்களுக்கான உதவித்தொகை வழங்குவது இடைநிறுத்தப்படலாம் அல்லது ரத்துசெய்யப்படலாம் மற்றும் இது தொடர்பான அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையாரின் முடிவே இறுதியானது.ஒரு மாணவர் தவறான அறிக்கை / சான்றிதழ்கள் மூலம் உதவித்தொகை பெற்றிருப்பது கண்டறியப்பட்டால், அவரது உதவித்தொகை உடனடியாக ரத்து செய்யப்படும் மற்றும் செலுத்தப்பட்ட உதவித்தொகை திரும்பப் பெறப்படும்.சான்றிதழ் / பட்டம் பெற தேவைப்படும் சாதாரண காலத்திற்கு மேல் உதவித்தொகை வழங்கப்படாது.ஒரு குடும்பத்தில் இரண்டு மாணவர்களுக்கு மேல் உதவித்தொகை வழங்கப்படாது.

திருமண உதவித்தொகை

அயல்நாடுகளுக்கு பணியின் பொருட்டு சென்று அங்கு இறக்கும் குறைந்த வருவாய் பிரிவைச் சேர்ந்த தமிழர்களின் குடும்பத்திலுள்ள மகன் / மகளுக்கு சிறந்த எதிர் காலத்தினை உருவாக்குவதும், அங்கீகரிக்கப்பட்ட வயதில் திருமணம் செய்வது, திருமணத்தின் பொருட்டு ஏற்படும் எதிர்பாராத கூடுதல் செலவீனம் காரணமாக அவர்களின் குடும்பத்தினர் கடனில் சிக்கித் தவிப்பதை தடுப்பதுமே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.

மேலும் விவரஙகளுக்கு இங்கு கிளிக் செய்யவும்

https://cms.tn.gov.in/sites/default/files/press_release/pr180524_t_680.pdf


அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

follow us on twitter                       :- CLICK HERE 

Follow us on Facebook                 :- CLICK HERE 

Follow us on telegram                  :- CLICK HERE 

Follow us on whatsapp channel   :- CLICK HERE 

Follow as on Instagram                :- CLICK HERE 

download our app play store        :- CLICK HERE

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள் வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback