Breaking News

தனியார் நிறுவனங்களில் கன்னடியர்களுக்கு 100% இடஒதுக்கீடு கட்டாயம் -மசோதாவிற்க்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் Kannadigas reservation bill.

அட்மின் மீடியா
0

தனியார் நிறுவனங்களில் கன்னடியர்களுக்கு 100% இடஒதுக்கீடு கட்டாயம் -மசோதாவிற்க்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்

குரூப் சி மற்றும் டி பதவிகளில் கன்னடர்களுக்கு தனியார் துறையில் 100 சதவீத இடஒதுக்கீடு வழங்குவதை கட்டாயமாக்கும் மசோதாவுக்கு கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். 

இது குறித்து அம்மாநில முதல்வர் சித்தராமையா தனது டிவிட்டர் பக்கத்தில்:-

கர்நாடகாவில் உள்ள அனைத்து தனியார் தொழில் நிறுவனங்களிலும் 'சி மற்றும் டி' கிரேடு பணிகளுக்கு முழுவதும் கன்னடர்களை மட்டுமே வேலைக்கு எடுக்கும் மசோதாவுக்கு நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.கன்னடர்கள் தங்கள் மாநிலத்தில் சுகபோக வாழ்க்கை வாழ வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், கன்னடர்கள் கன்னட நிலத்தில் வேலை வாய்ப்பை இழக்காமல் இருக்க வேண்டும் என்பதே தனது அரசின் விருப்பம். நாங்கள் கன்னடர்களுக்கு ஆதரவான அரசு. கன்னடர்களின் நலனைக் கவனிப்பதே எங்கள் முன்னுரிமை" என்று பதிவிட்டுள்ளார்.

The cabinet meeting held on Monday approved the bill to fix 50% reservation for administrative posts and 75% for non-administrative posts for Kannadigas in private industries and other organizations of the state.It is our government's wish that the Kannadigas should avoid being deprived of jobs in the land of Kannada and should be given an opportunity to build a comfortable life in the motherland. We are a pro-Kannada government. Our priority is to look after the welfare of the Kannadigas.

Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback