Breaking News

மாணவர்களுக்கு மாதம் ரூ1000 வழங்கும் தமிழ் புதல்வன் திட்டப் பணிகளைத் தொடங்கியது தமிழ்நாடு அரசு!

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் உள்ள ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்கள் பொருளாதார சிக்கல்களின் காரணமாக 12ஆம் வகுப்பு முடிந்தவுடன் அவர்களின் மேற்படிப்பை தொடர  மாதம் 1000 நிதி உதவி வழங்கப்பட்டு வருகின்றது

அதைபோல், 2024 - 2025 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வரும் 'புதுமைப்பெண்' திட்டத்தை போல் மாணவர்களுக்கும் 'தமிழ் புதல்வன்' திட்டம் அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்திருந்தார்

அதன்படி, 6 -ம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்று உயர் கல்வி சேரும் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள், பொது அறிவு நூல்கள் என அவர்களது கல்வியை மேம்படுத்த உதவி செய்யும் நோக்கில் கொண்டுவரப்பட்ட 'தமிழ் புதல்வன்' என்ற திட்டத்தில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் மாணவர்களின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும்.

அந்த வகையில், தற்போது ஆகஸ்ட் மாதம் முதல் தமிழ் புதல்வன் திட்டம் மாணவர்களுக்கு மாதம் ₹1000 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்

 

தமிழ் புதல்வன்உயர் கல்விக்கு செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மாதம் 1,000 ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கும் தமிழ்ப் புதல்வன்' திட்டம், ஆகஸ்டில் அமலுக்கு வரும் முதலமைச்சர் முதல்வர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.
 
இதன்படி, தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் போது ஆதார் எண்ணை சமர்பிக்க வேண்டும். இதற்கு, அருகில் உள்ள ஆதார் மையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
 
ஆதார் எண்ணைப் பெறும் வரை, விண்ணப்பித்ததற்கான அடையாளச் சான்று அல்லது புகைப்படத்துடன் கூடிய வங்கிப் புத்தகம், பான் அட்டை, கடவுச்சீட்டு, குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்ட அட்டை, கிசான் அட்டை, ஓட்டுநர் உரிமம், தாசில்தார் அல்லது சான்றொப்பமிடும் தகுதியான அதிகாரிகள் அளிக்கும் புகைப்படத்துடன் கூடிய கடிதம், ஏதேனும் துறையில் இருந்து வழங்கப்பட்ட சான்று ஆகியவற்றில் ஒன்றை அளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. 
 
மேலும் இந்த தகவலை அனைத்து மாணவர்களுக்கும் தெரியும் வகையில் கல்வி நிறுவனங்கள் விளம்பரப்படுத்தி, அருகிலுள்ள ஆதார் மையங்களுக்கு சென்று ஆதார் எண் எடுக்க வேண்டும் என்று மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
அந்தப் பகுதியில் ஆதார் மையம் இல்லாவிடில் மாணவர்கள் ஆதார் எடுப்பதற்கான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback