Breaking News

மத்திய அரசின் 2024-25ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் சிறப்பம்சங்கள் முழு விவரம் Budget 2024 Live

அட்மின் மீடியா
0

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை அமைத்துள்ளது இந்நிலையில் ஜூலை 23ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது

2024 -2025 முழு பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய இருக்கிறார். 

பிரதமர் மோடி மூன்றாவது முறையாக அமைத்துள்ள ஆட்சிக்காலத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவே ஆகும்.

நடப்பாண்டின் 2வது பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று ஜூலை 22ம் தேதி தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வரை 19 அமர்வுகளுடன் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


மத்திய அரசின் 2024-25ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் சிறப்பம்சங்கள் 

ஆந்திராவிற்கு ரூ.15,000 கோடியும், பீகாருக்கு ரூ.26,000 கோடியும் சிறப்பு நிதியாக ஒதுக்கீடு

முத்ரா கடன் உதவித் திட்டத்தில் கடன் தொகை ₹20 லட்சமாக உயர்வு

ஊரக வளர்ச்சிக்கு ₹2.66 லட்சம் கோடி பட்ஜெட்டில் ஒதுக்கீடு

மகளிர் நலன் சார்ந்த திட்டங்களுக்கு ₹3 லட்சம் கோடி ஒதுக்கீடு

80 கோடி மக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் பிஎம் கரீப் அன்ன யோஜனா திட்டம் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்

ரூ. 10 லட்சம் கோடியில் நகர்ப்புற ஏழை, நடுத்தர மக்களின் வீடு தேவைகள் பூர்த்தி செய்யப்படும்

12 மெகா தொழில் பூங்காக்கள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்படும்

தொழில் பயிற்சி பெறும் 1 கோடி இளைஞர்களுக்கு பழகுநர் ஊக்கத்தொகை மாதந்தோறும் ரூ.5,000 வழங்கப்படும் மாதம் ரூ.5000 ஊக்கத் தொகையுடன் 1 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பயிற்சி

உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு ரூ.10 லட்சம் வரை கடன் உதவி வழங்க திட்டம்

நாடு முழுவதும் பணிபுரியும் பெண்களுக்காக ஹாஸ்டல் மற்றும் தங்குமிடங்கள் அமைக்கப்படும். 

ஆந்திராவில் பிரிக்கும் போது கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்

கிசான் கிரெடிட் கார்டு 5 மாநிலங்களில் முதற்கட்டமாக அறிமுகப்படுத்தப்படும்.

வேளாண்மைத் துறைக்கு ரூ.1.52 லட்சம் கோடி ஒதுக்கீடு

ஆந்திராவில் சமூக மற்றும் கட்டமைப்புகளை மேம்படுத்த சிறப்பு நிதி ஒதுக்கீடு

ஆந்திராவின் அமராவதி நகரை கட்டமைக்க ரூ.15,000 கோடி நிதி

சென்னை - விசாகப்பட்டினம் இடையே பொருளாதார வழித்தடத்தை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு தமிழ்

வரும் காலங்களில் ஆந்திராவின் மேம்பாட்டிற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்

பீகார் மேம்பாலத்தை மேம்படுத்த புதிய சாலைகள், விமான நிலையங்கள் அமைக்கப்படும்

பீகாரின் கயாவில் தொழில்துறை மையம் அமைக்க நிதி ஒதுக்கீடு

பீகாரில் புதிய சாலைகள் அமைக்க ரூ.26,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்

பீகாரில் புதிதாக இரண்டு வழித்தடங்களில் எக்ஸ்பிரஸ் சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு

பீகாரில் வெள்ள தடுப்பு பணிகளுக்கு ரூ.11,500 கோடி ஒதுக்கீடு

பீகாரில் உள்ள கோவில்களை மேம்படுத்த மத்திய பட்ஜெட்டில் சிறப்பு நிதி ஒதுக்கீடு

புதிதாக பணிகளில் சேரும் இளைஞர்களுக்கு அரசு தரப்பில் ஒரு மாதம் ஊதியம் வழங்கப்படும். இபிஎஃப்ஓ-வில் பதிவு செய்யப்பட்ட பிறகு ரூ.15000 முதல் ரூ.1 லட்சம் வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

தனிநபர் வருமான வரியில் மாற்றமில்லை:

தனிநபர் வருமான வரி ரூ.0-3 லட்சம் வரை வரி கிடையாது.

தனிநபர் வருமான வரி ரூ.3-7 லட்சம் வரை 5% வரி.

தனிநபர் வருமான வரி  ரூ.7-10 லட்சம் வரை 10% வரி.

தனிநபர் வருமான வரி ரூ.10-12 லட்சம் வரை 15% வரி.

தனிநபர் வருமான வரி ரூ.12-15 லட்சம் வரை 20% வரி.

தனிநபர் வருமான வரி ரூ.15 லட்சத்துக்கு மேல் 30% வரி.

நிரந்தரக் கழிவுக்கான வரம்பு வரிப் பிடித்தம் அளவு 50 ஆயிரத்திலிருந்து 75 ஆயிரமாக உயர்வு .

ஆன்லைன் வர்த்தகத்தின் விற்பனை வரி குறைப்பு.

அந்நிய முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில் மறைமுக முதலீட்டாளர் வரி நீக்கம்.

தாமிரம் உள்ளிட்ட 25 அரியவகை கனிமங்களுக்கு சுங்கவரியில் இருந்து விலக்கு.

தங்கம், வெள்ளி மீதான சுங்கவரி 6 சதவீதமாக குறைப்பு.

பிளாட்டினம் மீதான சுங்கவரி 6.5 சதவீதமாக குறைப்பு.

மொபைல் போன்கள் மற்றும் அதுதொடர்பான சாதனங்கள் மீதான சுங்கவரி 15% குறைப்பு -மத்திய நிதியமைச்சர்.

புற்றுநோய்க்கு வழங்கப்படும் 3 முக்கிய மருந்துகளுக்கான சுங்கவரி கட்டணம் ரத்து.

எக்ஸ்ரே உபகரணங்களுக்கு சுங்கவரி ரத்து.


Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback