ஹவுரா சிஎஸ்எம்டி எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து.12 பேர் படுகாயம்! நடந்தது என்ன முழு விவரம்
ஜார்க்கண்ட்டின் சரைகேலா அருகே சரக்கு ரயில் தடம் புரண்ட நிலையில், அவ்வழியே வந்த ஹவுரா பயணிகள் ரயில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.
சரக்கு ரயிலின் பக்கவாட்டுப் பகுதியில் மோதியதால் 12பயணிகள் காயமடைந்துள்ளனர்.
இன்று அதிகாலை 3.45 மணிக்கு ஏற்பட்ட விபத்தில் 14 பெட்டிகள் தடம்புரண்டன.
மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் இருந்து மும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த ஹவுரா- சிஎஸ்எம்டி எக்ஸ்பிரஸ் (Train No - 12810) ரயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
ஹவுரா சிஎஸ்எம்டி எக்ஸ்பிரஸ் சக்ரதர்பூர் அருகே ராஜ்கர்ஸ்வான் வெஸ்ட் அவுட்டர் மற்றும் சக்ரதர்பூர் பிரிவில் உள்ள பாரபாம்பூ இடையே அதிகாலை 3.45 மணியளவில் எதிர்பாராதவிதமாக ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில், ரயில் பயணம் செய்த 12 பயணிகள் படுகாயம் அடைந்து, மேலும் பலர் காயமடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தகவலறிந்து வந்த அதிகாரிகள், ரயில்வே ஊழியர்களுடன் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், காயமடைந்த பயணிகளுக்கு ரயில்வே மருத்துவ குழுவினர் உடனடியாக முதலுதவி அளித்து, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாக இந்திய ரயில்வே தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
Tags: இந்திய செய்திகள்