Breaking News

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 120 ஆக உயர்வு- தொடர்ந்து நடக்கும் மீட்பு பணி

அட்மின் மீடியா
0

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 120 ஆக உயர்வு

 


கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக அதிகரித்துள்ளது

கேரளாவில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், கேரளாவின் வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது. 

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் 33 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 5,500 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 5 அமைச்சர்கள் ஒருங்கிணைந்து மீட்புப் பணிகளைக் கண்காணித்து வருகின்றனர்.என கூறியிருந்தார்.

இந்நிலையில் தற்போது வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது.இதன் எண்ணிக்கை மாறலாம். நேற்றிரவு தூங்கச் சென்ற பலர் நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர். மேலும் அங்குள்ள வீடுகள், கடைகள், பள்ளிகள் உள்ளிட்ட கட்டடங்கள் மண்ணுக்குள் புதைந்து போயின.

ராணுவம், தேசிய பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புத் துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். 

தோண்டத்தோண்ட உடல்கள் அடுத்தடுத்து கிடைத்து வருவதால் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback