நாடு முழுவதும் நடைபெற்ற 13 சட்டமன்ற இடைதேர்தலில் 10 இடங்களில் இந்தியா கூட்டணி வெற்றி முழு விவரம்
நாடு முழுவதும் 7 மாநிலங்களில் 13 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 10 இடங்களில் வெற்றி பெற்று இந்தியா கூட்டணி முன்னிலை வகிக்கின்றது
நாடுமுழுவதும் தமிழ்நாடு, பீகார், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஜூலை 10 ஆம் தேதி நடைபெற்றது.
அந்த வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று முடிந்து அதன் முடிவு நிலவரம் வெளியாகி உள்ளது.
அதில் 13 தொகுதிகளில் 10 சட்டமன்றத் தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.
2 தொகுதியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது, மேலும் 1 தொகுதியில் சுயேட்சை வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளார்.
திரிணாமூல் காங்கிரஸ் - 4
காங்கிரஸ்: 4
பாஜக: 2
திமுக: 1
ஆம் ஆத்மி: 1
சுயேட்சை:1
13 தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்:-
தமிழ்நாடு:-
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67,757 வாக்குகள் வித்திசாயத்தில் பாமக வேட்பாளர் சி. அன்புமணியைத் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்
மேற்கு வங்க மாநிலம்:-
ராய்கஞ்ச் சட்டமன்ற தொகுதி திரினாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் கிருஷ்ண கல்யாணி 50,077 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜகவின் மானஸ் குமார் கோஷை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்
பாக்தா சட்டமன்ற தொகுதி திரினாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மதுபர்ணா தாக்கூர் 33,455 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் பினய் குமார் பிஸ்வாஸைத் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்
ரணகாட் தக்ஷின் சட்டமன்ற தொகுதி திரினாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் முகுத் மணி அதிகாரி பாஜக வேட்பாளர் மனோஜ் குமார் பிஸ்வாஸை 39,048 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்
மணிக்தலா சட்டமன்ற தொகுதி திரினாமுல் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் சுப்தி பாண்டே பாஜக வேட்பாளர் கல்யாண் சௌபேவை 62,312 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்
இமாச்சலப் பிரதேச மாநிலம்:-
ஹமிர்பூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் டாக்டர் புஷ்பிந்தர் வர்மா பாஜக வேட்பாளர் ஆஷிஷ் சர்மாவிடம் 1,571 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்
நாலகர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஹர்தீப் சிங் பாவா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் 8,990 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.
டேஹ்ரா சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கம்லேஷ் தாக்கூர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஹோசியார் சிங் 9399 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம்:-
பத்ரிநாத் சட்டமன்ற தொகுதி காங்கிரஸின் லக்பத் சிங் புடோலா தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ராஜேந்திர சிங் பண்டாரியை விட 5,224 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
மங்களூர் சட்டமன்ற தொகுதி காங்கிரஸின் காசி முகமது நிஜாமுதீன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கர்தார் சிங் பதானாவை 422 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றுள்ளார்
மத்தியப் பிரதேசம் மாநிலம்:-
அமர்வாரா சட்டமன்ற தொகுதி பாஜகவின் கமலேஷ் பிரதாப் ஷா 3,027 வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் தீரன் சா சுகாரம் தாஸை தோற்கடித்து வெற்றி பெற்றுள்ளார்
பீகார் மாநிலம்:-
ரூபாலி சட்டமன்ற தொகுதி சுயேச்சை வேட்பாளர் சங்கர் சிங் ஜனதாதள் வேட்பாளர் கலதர் பிரசாத் மண்டலை 8,246 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
பஞ்சாப் :-
மேற்கு ஜலந்தர் தொகுதி இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் மொஹிந்தர் பால் பகத் 37325 வாக்குகள் வித்தியாசத்தில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர்ஷீட்டல் அங்கூரலை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளார்.
தேர்தல் ஆணைய ரிசல்ட் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://results.eci.gov.in/AcResultByeJuly24/index.htm
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்