ஓமன் நடு கடலில் கவிழ்ந்த எண்ணெய் கப்பல் 13 இந்தியர்கள் உட்பட 16 காணவில்லை தேடும் பணி தீவீரம் oil tanker sinks off oman coast
ஓமன் அருகே கடலில் எண்ணெய் கப்பல் கவிழ்ந்ததில் 13 இந்தியர்களை காணவில்லை. கப்பலில் பயணம் செய்த 13 இந்தியர்கள், இலங்கையை சேர்ந்த 3 பேர் என மொத்தம் 16 பேரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பிரெஸ்டீஜ் பால்கன் எனும் இந்த டேங்கரில் இலங்கையை சேர்ந்த 3 பேர் மற்றும் இந்தியாவை சேர்ந்த 13 பேர் பணியாற்றி உள்ளனர்.
திங்கட்கிழமை அன்று ராஸ் மத்ரகாவில் இருந்து தென்கிழக்கே சுமார் 25 கடல் மைல் தொலைவில் ஓமனின் டுக்ம் துறைமுகத்துக்கு அருகே கப்பல் கவிழ்ந்தது.
கடலில் கப்பல் தலைகீழாக கவிழ்ந்த நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 117 மீட்டர் நீளம் கொண்ட இந்த கப்பல் குறுகிய கடல் பயணத்துக்கானது.டுக்ம் துறைமுகம் ஓமனின் தென்மேற்கு கடற்கரையில் அமைந்துள்ளது.
Tags: இந்திய செய்திகள் வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ