Breaking News

நிலசரிவு ஏற்பட்ட இடத்தில் இருந்து 138 கி.மீ தூரம் வரை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 31 உடல்கள் மீட்பு வயநாட்டில் தொடரும் சோகம்

அட்மின் மீடியா
0

நிலசரிவு ஏற்பட்ட இடத்தில் இருந்து 138 கி.மீ தூரம் வரை ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 31 உடல்கள் மீட்பு வயநாட்டில் தொடரும் சோகம்

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 151 ஆக அதிகரித்துள்ளது. 

கேரளாவின் வயநாடு பகுதியில் தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக, முண்டக்கை, சூரல்மலை, மேப்பாடி ஆகிய இடங்களில் நேற்று அதிகாலை 2 மணி மற்றும் 4.30 மணியளவில் என அடுத்தடுத்து 2 பெரும் நிலச்சரிவு ஏற்பட்டன. 


ஏற்கனவே ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்த சூழலில், நிலச்சரிவும் ஏற்பட்டதால்  இந்த 3 கிராமங்களும் உருக்குலைந்து போயுள்ளது. சுமார் 500 வீடுகள் மண்ணில் புதைந்துள்ளதாக கூறப்படுகிறது. 1000க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது

.இதனையடுத்து தேசிய பேரிடர் மீட்பு படையினர், ராணுவத்தினர் மற்றும் கேரள மீட்பு படையினர் என அனைத்து அரசு இயந்திரங்களும் களமிறங்கி மீட்டுப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நேற்று முழுவதும் நடைபெற்ற மீட்பு பணியில் 1000 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இன்று காலை வயநாடு நிலச்சரிப்பில் சிக்கி உயிரிழந்த 31 பேரின் உடல்கள் பல கிலோமீட்டர் தூரம் வரை சாலியாற்றில் மிதந்து வந்ததால் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. 138 கிலோமீட்டர் தாண்டி நிலம்பூரில் மீட்கப்பட்டது மேலும் ஆற்றில் இருந்து உடல்களை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மீட்டனர். மண்ணை தோண்ட தோண்ட உடல்கள் கண்டெடுக்கப்படுவதால் மக்கள் மற்றும் மீட்புக்குழுவினர் திகைத்துப் போயுள்ளனர்.

கனமழை தொடர்ந்து வருவதால் சாலைகள், பாலங்கள் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. இதனால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டிருக்கிறது. நிலச்சரிவில் சிக்கி காணாமல்போன சொந்தங்களை தேடி, மக்கள் அங்கு பரிதவித்து வரும் காட்சிகள் காண்போரை கலங்கடிக்கும் வண்ணம் உள்ளது.

மீட்பு பணிகள் வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.adminmedia.in/2024/07/blog-post_715.html

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback