Breaking News

மின் இணைப்பு பெற 14 மீட்டர் உயரத்திற்குள் அமையும் வணிகக் கட்டிடங்களுக்கு கட்டட முடிவுச் சான்றிதழ் பெறுவதிலிருந்து விலக்கு மின் வாரியம் அறிவிப்பு

அட்மின் மீடியா
0

மின் இணைப்பு பெற 14 மீட்டர் உயரத்திற்குள் அமையும் வணிகக் கட்டிடங்களுக்கு  கட்டட முடிவுச் சான்றிதழ் பெறுவதிலிருந்து விலக்கு மின் வாரியம் அறிவிப்பு

தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகள். 2019-இல் அனைத்து வகையான வணிகக் கட்டடங்களும் கட்டட முடிவு சான்றிதழ் கட்டாயமாக பெறப்பட வேண்டும் என்ற நிலை உள்ளது. 

இதனால் சிறு வணிகர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளானதால், சிறு வணிகர்களின் நலன் கருதி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 21.06.2024 அன்று மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்டபடி சிறு வணிகர்கள் பயன்பெறும் வகையில் 300 சதுர மீட்டர் மொத்த கட்டட பரப்பளவிற்குள் 14 மீட்டர் உயரத்திற்குள் அமையும் வணிகக் கட்டடங்களுக்கு, கட்டட முடிவுச் சான்றிதழ் பெறுவதிலிருந்து விலக்கு அளித்து அரசாணை எண்.123 வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி (ந.வ.4(1)) துறை நாள் 28.06.2024-இல் அரசு ஆணையிட்டுள்ளது.



இந்நிலையில் தமிழ்நாட்டில் மின் இணைப்பு பெறுவதற்கான விதிமுறைகளில் தளர்வுகளை மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

14 மீட்டர் உயரம் மிகாமல் உள்ள 8 குடியிருப்பு அலகுகள் கொண்ட கட்டடம், 750 சதுர மீட்டர் பரப்பளவுக்கு உட்பட்ட வீடுகள், அனைத்து தொழிற்சாலை கட்டடங்களுக்கும் மின் இணைப்பை பெற கட்டட நிறைவு சான்றிதழ் தேவையில்லை என தமிழ்நாடு மின்வாரியம்  

மின் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-

தமிழ்நாட்டு மக்களுக்கு நற்செய்தி! தமிழக அரசின் புதிய ஆணைப்படி கீழ்காணும் கட்டிடங்களுக்கு, மின் இணைப்பு பெற 'கட்டிட நிறைவு சான்றிதழ்' தேவை இல்லை.

🔹14 மீட்டர் உயரம் மிகாமல் உள்ள 8 குடியிருப்பு அலகுகள் கொண்ட குடியிருப்பு கட்டிடங்கள்.

🔹750 சதுர மீட்டர் பரப்பளவிற்குட்பட்ட வீடு

🔹14 மீட்டர் உயரம் மிகாமல் 300 சதுர மீட்டர் கட்டிட பரப்பளவிற்குட்பட்ட வணிக கட்டிடங்கள்

🔹அனைத்து தொழிற்சாலை கட்டிடங்கள்

மின் வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பு பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

https://www.tangedco.org/en/tangedco/online-services/onlinesernew/

Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி

Give Us Your Feedback