வங்க கடலில் 19ம் தேதி உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
வங்க கடலில் 19ம் தேதி உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் இன்று கன மழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது
குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் நீலகிரி
மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.அதே போல் கோவை
மாவட்டத்திற்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நெல்லை,
கன்னியாகுமரி, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர் மாவட்டங்களுக்கு
மஞ்சள் எச்சரிக்கையும் விடுத்த இந்திய வானிலை ஆய்வு மையம் அறிக்கை
வெளியிட்டுள்ளது.மேலும்
நேற்று மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தெற்கு சத்தீஸ்கர் மற்றும் அதனை ஒட்டிய விதர்பா நில பகுதிகளில் நிலவுகிறது
ஒரு
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய
வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் 19 ஜூலை வாக்கில் உருவாக வாய்ப்புள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக,
16.07.2024:
தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்
இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
மேலும் வலுவான தரைக்காற்று 30 -40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். நீலகிரி
மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் அதி கனமழையும்; கோயம்புத்தூர் மாவட்ட மலை
பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்; திருப்பூர், தேனி,
திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும்
கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
17.07.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை வலுவான தரைக்காற்று 30 -40 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். பெய்யக்கூடும். மேலும் நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும்; திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.
18.07.2024: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
19.09.2024 முதல் 22.07.2024 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
Tags: தமிழக செய்திகள்