Breaking News

ஆகஸ்டு 1ம் தேதி முதல் மாறப்போகும் சில முக்கிய அம்சங்கள் முழு விவரம்

அட்மின் மீடியா
0

ஆகஸ்டு 1 ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சில குறிப்பிட்ட மாற்றங்களை மத்திய அரசு செய்து வருகிறது. மாறப்போகும் சில முக்கிய அம்சங்களை இங்கு பட்டியல் இட்டுள்ளோம்

 


கேஸ் சிலிண்டர் விலை

ஆகஸ்ட் 1 முதல் சமையல் சிலிண்டரின் விலையில் மாற்றம் இருக்கலாம். வழக்கமாக, ஒவ்வொரு மாதமும் தொடங்கும் முன் சிலிண்டரின் விலையை எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள் திருத்திய பின்னர் புதிய விலை நிர்ணயம் செய்யப்படும். 

ஜூலை மாதம் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டது. இம்முறையும் சிலிண்டர் விலை குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

HDFC கிரெடிட் கார்டு

Tata New Infinity மற்றும் Tata New Plus கிரெடிட் கார்டுகள் ஆகஸ்ட் 1 முதல் HDFC வங்கியால் மாற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார்டு வைத்திருப்பவர்கள் Tata New UPI ஐடி மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு 1.5 சதவீதம் புதிய காயின்களைப் பெறுவார்கள் என்று அவ்வங்கி தெரிவித்துள்ளது.

வங்கி விடுமுறை

ஒவ்வொரு மாதமும் வங்கிகளின் வேலை நாட்கள் மற்றும் விடுமுறை தினங்கள் குறித்த பட்டியலை ரிசர்வ் வங்கி வெளியிடும். அந்த வகையில் ஆகஸ்ட் மாதத்துக்கான வங்கி விடுமுறைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்தில் மொத்தம் 8 நாட்கள் விடுமுறை வருகிறது. இதில் 4 ஞாயிற்றுக் கிழமைகள் மற்றும் இரண்டு சனிக்கிழமைகள் அடங்கும். இதுதவிர ஆகஸ்ட் 15 மற்றும் ஆகஸ்ட் 26 ஆகிய தினங்களும் வங்கிகள் இயங்காது.

கூகுள் மேப்

ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. இந்தியாவில் நிறுவனம் தனது சேவைக்கான கட்டணத்தை 70 சதவீதம் குறைத்துள்ளது.

 இது தவிர, கூகுள் மேப்ஸ் சேவைக்கு டாலருக்கு பதிலாக இந்திய ரூபாயில் கட்டணம் வசூலிக்கும் என்று கூறியுள்ளது. இந்த விதிமுறை மாற்றம் சாதாரண பயனர்களுக்கு பிரச்சினையாக இருக்காது என்று கூறப்படுகிறது.

பாஸ்டேக் விதிகள் 

ஆகஸ்ட் 1 முதல் நடைமுறைக்கு வரும் புதிய ஃபாஸ்டேக் விதிகளின் கீழ்,  கேஒய்சி அக்டோபர் 31 க்குள் முடிக்கப்பட வேண்டும். ஃபாஸ்டேக் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் இந்த காலக்கெடுவுக்குள் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட அனைத்து ஃபாஸ்டேக்குகளுக்கும் கேஒய்சியை முடிக்க வேண்டும் என இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது, 

 

அட்மின் மீடியா செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள 

Follow as on google news             :- CLICK HERE 

Tags: தமிழக செய்திகள் முக்கிய அறிவிப்பு முக்கிய செய்தி

Give Us Your Feedback