நாடு முழுவதும் 2 மாதங்களில் அமலாகும் சேட்டிலைட் டோல் கட்டண முறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவிப்பு GPS based toll
நாடு முழுவதும் 2 மாதங்களில் அமலாகும் சேட்டிலைட் டோல் கட்டண முறை அமைச்சர் நிதின் கட்காரி அறிவிப்பு
தற்போது நடைமுறையில் உள்ள டோல்கேட் கட்டணம் வசூலிக்கும் முறையை முற்றிலுமாக நீக்கிவிட்டு சேட்டிலைட் அடிப்படையில் டோல்கேட் கட்டணம் வசூலிக்கும் முறை இன்னும் 2 மாதத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்காரி அறிவித்துள்ளார்
செயற்கைகோள் மூலம் பயணம் செய்யும் தூரத்தை கணக்கிட்டு வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கும் முறை டோல்கேட்டுகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளது - நிதின் கட்கரி
தேசிய நெஞ்சாலைகளில் தற்போதுள்ள சுங்கச்சாவடிகளுக்கு மாற்றாக ஜிபிஎஸ் மூலம் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறையை இன்னும் 2 மாதங்களில் முதல் மத்திய அரசு அமல்படுத்தவுள்ளதாக மத்திய போக்குவரத்துத் துறை அமைச்சா் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்
இதன் மூலம் வாகனங்களின் இயக்கத்தைப் பொறுத்து சுங்கக்கட்டணம் வாகன ஓட்டிகளின் வங்கிக்கணக்கில் இருந்து நேரடியாகப் பெற்றுக் கொள்ளப்படும் என கூறியுள்ளார்
நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகளுக்கு மாற்றாக புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய ஜிபிஎஸ் மூலம் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் முறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. வாகன பதிவு எண் பலகைகளை தானாக அங்கீகரிக்கும் கேமராக்கள் மூலம் சுங்கக் கட்டணம் வசூலிக்கும் முறை அமலுக்கு வரும் என்றாா்.
நாட்டின் தேசிய நெடுஞ்சாலைகளில் பயணிப்பதற்கு மக்கள் சுங்க கட்டணம் செலுத்த வேண்டும். sஉங்கசாவடிகளில் பயணிகள் நீண்ட நேரம் காத்திருப்பதால் FAST TAG முறை அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் பயணிகள் சுங்கசாவடிகளில் காத்திருப்பு நேரம் மிகவும் குறைந்துள்ளது.
இந்நிலையில் டோல்கேட் கட்டணம் வசூலிப்பில் புதிய முறைய மத்திய அரசு நடைமுறைக்குக் கொண்டு வர உள்ளதாகவும் அதன்படி செயற்கைக்கோள் அடிப்படையிலான கட்டண முறையை அமல்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளதாக, அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்
Tags: இந்திய செய்திகள் தமிழக செய்திகள் முக்கிய செய்தி