Breaking News

மத்திய பட்ஜெட் 2024 இந்த திட்டத்திற்க்கு எல்லாம் நிதி ஒதுக்குங்க பட்டியல் இட்ட முதல்வர் ஸ்டாலின் Budget 2024

அட்மின் மீடியா
0

ஜூலை 23ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள மத்திய பட்ஜெட் 2024-ல் தமிழகத்திற்க்கான பல்வேறு திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அரசை வலியுறுத்தியுள்ளார்.



பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை அமைத்துள்ளது இந்நிலையில் ஜூலை 23ஆம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் எனவும் மத்திய அரசு அறிவித்துள்ளது

2024 -2025 முழு பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய இருக்கிறார். 

பிரதமர் மோடி மூன்றாவது முறையாக அமைத்துள்ள ஆட்சிக்காலத்தில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவே ஆகும். இந்நிலையில் தமிழ்க முதல்வர் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்

நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ள Budget2024-இல்,

மூன்று ஆண்டுகளாக விடுவிக்கப்படாமல் இருக்கும் Chennai Metro Rail திட்டத்திற்கான நிதி

தாம்பரம் - செங்கல்பட்டு இடையே மேம்பால விரைவுச் சாலைத் திட்டத்திற்கான ஒப்புதல்

பத்தாண்டுகளாக வருமான வரிச் சுமை குறைக்கப்படும் என்ற நடுத்தரக் குடும்பங்களின் எதிர்பார்ப்பு

கோவை மற்றும் மதுரை மெட்ரோ இரயில் திட்டங்களுக்கான ஒப்புதல்

தமிழ்நாட்டில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மற்றும் புதிய ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்திடப் போதிய நிதி ஒதுக்கீடு

கிராமப்புற மற்றும் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டங்களின்கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான செலவு வரம்பை உயர்த்துதல்

உள்ளிட்ட தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை ஒன்றிய அரசு நிறைவு செய்யும் என்று நம்புகிறேன்.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback