Breaking News

2024 நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

அட்மின் மீடியா
0

 2024 நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக அறிவிப்பு.

 


இந்தியாவில் 2024ம் ஆண்டுக்கான நீட் தேர்வுகளில் முறைகேடுகள், வினாத்தாள் கசிவு நடந்ததாக புகார் வந்ததை தொடர்ந்து இதன் அடிப்படையில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

மேலும் நீட் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்த மத்திய அரசு சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இன்றைய விசாரணையின்போது நீட் மறுதேர்வு கிடையாது. தேர்வுக்கான புனிதம் மீறப்பட்டதாக முடிவுக்கு வர முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

சிஸ்டமேட்டிக் மீறல் அல்லது தேர்வுக்கான புனிதம் மீறலுக்கான எந்தவொரு காரணமும் இல்லை. இரண்டு இடங்களில் கேள்வித்தால் லீக் ஆகி பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

23.33 லட்சம் மாணவர்களை மீண்டும் தேர்வு எழுத உத்தரவிட்டால் அவர்களுடைய சொந்த ஊரில் இருந்து தேர்வு நடத்தப்படும் மையத்திற்கு பல கிலோ மீட்டர் கடந்து வர வேண்டியிருக்கும். இது மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும், ஒட்டுமொத்த சிஸ்டமும் மீறப்பட்டுள்ளது அல்லது தேர்வின் புனிதம் மீறப்பட்டுள்ளது என்ற முடிவுக்கு தற்போதைய நிலையில் வருவது மிகவும் கடினமானது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜார்கண்டின் ஹசாரிபாக் மற்றும் பீகாரில் உள்ள பாட்னாவில் குறைந்தது இரண்டு தேர்வு மையங்களில் வினாத்தாள் கசிந்துள்ளதாக திட்டவட்டமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இது ஒரு மறுக்க முடியாத உண்மை என தலைமை நீதிபதி கூறியுள்ளார்.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்

Give Us Your Feedback