2026 சட்டமன்ற தேர்தலுக்கான ஒருங்கிணைப்புக் குழுவை அறிவித்தது திமுக! முழு விவரம்
கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக கழகப் பணிகளை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும் அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக்குழு தனது பணிகளை மிகச் சிறப்பாகச் செய்தது.
அதே வகையில் வரவிருக்கும் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு, கழகத்தில் மேற்கொள்ள வேண்டிய மாறுதல்கள் அமைப்பு ரீதியான சீரமைப்புகளை மாண்புமிகு - கழகத் தலைவருக்கும் தலைமைக்கும் பரிந்துரைக்கவும், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பின்வருமாறு அமைக்கப்படுகிறது.
“ஒருங்கிணைப்புக்குழு”
மாண்புமிகு திரு கே.என்.நேரு
மாண்புமிகு திரு. ஆர்.எஸ்.பாரதி
மாண்புமிகு திரு. எ.வ.வேலு
மாண்புமிகு திரு. தங்கம் தென்னரசு
மாண்புமிகு திரு. உதயநிதி ஸ்டாலின்
இவர்கள் கட்சியில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள், அமைப்பு ரீதியான சீரமைப்புகளை பரிந்துரைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்