கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் நிலசரிவு மண்ணில் புதைந்து 229 பேர் பலி எத்தியோப்பியாவில் சோகம் வீடியோ இணைப்பு ethiopia
கனமழை காரணமாக ஏற்பட்ட திடீர் நிலசரிவு மண்ணில் புதைந்து 229 பேர் பலி எத்தியோப்பியாவில் சோகம்
எத்தியோப்பியாவின் கெஞ்சோ சாச்சா கோஸ்டி மாவட்டத்தில் கோபா மண்டலத்தில் பெய்த கடும் மழையால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் இதுவரை 229 பேர் உயிரிழந்துனர்
மண்ணுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து வருகிறது. தற்போது வரை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 229 ஆக உள்ளது. இதில் 81 பேர் பெண்கள். ஐந்து பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்
மேலும் அப்பகுதியில் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. சேற்றில் சிக்கியவர்களில் 5 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டனர்
சம்பவ இடத்தில் பெரும் திரளானவர்கள் கூடியிருப்பதும் சிலர் புதையுண்டவர்களை தேடி மண்ணை தோண்டுவதும் அங்கிருந்து வெளியான படங்கள் காட்டுகின்றன. பகுதி அளவு சரிந்த மலை ஒன்று பின்னணியில் தெரிய சிவந்த நிற மண் குவிந்து காணப்படும் காட்சிகளும் அங்கிருந்து எடுக்கப்பட்டுள்ளன.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்
https://x.com/iyoba4u/status/1815718245040632099
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ