சென்னை மக்களே இந்த பகுதியில் 2 நாள் தண்ணீர் வராது! முழு விவரம்
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தால் கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து குடிநீர் எடுத்துச் செல்லும் பிரதான உந்து குழாயில் இணைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது
இதன் காரணமாக, ஜூலை 12, காலை 10 மணி முதல் ஜூலை 13, மாலை 6 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக சென்னை குடிநீர் வாரியம் தெரிவித்துள்ளது
குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்
5,6,8,9,10. 36 மணி நேரம் 12.07.2024 காலை 10.00 மணி முதல்
13.07.2024 மாலை 6.00 மணி வரை
மண்டலம்
மண்டலம்-5 (இராயபுரம்)
புரசைவாக்கம் (பகுதி). பெரியமேடு. சௌகார்பேட்டை, ஜார்ஜ் டவுன். ஏழு கிணறு ரோடு, முத்தியால்பேட்டை, வால்டாக்ஸ் ரோடு, எழும்பூர். பூங்கா நகர், சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை, சேப்பாக்கம் (பகுதி). கொண்டிதோப்பு.
மண்டலம்-6 (திரு.வி.க.நகர்) ஓட்டேரி, அயனாவரம். பெரம்பூர். செம்பியம்.
மண்டலம்-8 [அண்ணா நகர்)கீழ்ப்பாக்கம், வில்லிவாக்கம், கெல்லிஸ், புரசைவாக்கம் (பகுதி)
மண்டலம்-9 (தேனாம்பேட்டை) திருவல்லிக்கேணி, சேப்பாக்கம்.
மண்டலம்-10 (கோடம்பாக்கம்) தியாகராய நகர். சைதாப்பேட்டை.
முன்னெச்சரிக்கையாக வேண்டிய அளவு குடிநீரை சேமித்துக் கொள்ளவும்
குடிநீர் இணைப்பு இல்லாத பகுதிகள் மற்றும் அழுத்தம் குறைவான பகுதிகளுக்கு தினசரி லாரிகள் மூலம் இலவச நடைகளாக வழங்கப்படும் குடிநீர் தடையின்றி வழக்கம்போல் வழங்கப்படும்.
அவசரத் தேவைகளுக்கு லாரிகள் மூலம் (Dial for Water) குடிநீர் பெற்றுக்கொள்ள https://cmwssb.tn.gov.in இணையதள முகவரியினை பயன்படுத்தி பதிவு செய்து பெற்றுக்கொள்ளலாம்.
Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி